நேற்று உத்திரபிரதேசம் மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி, மத்திய அமைச்சர்கள் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.சென்னை வெள்ள மீட்பு நடவடிக்கைக்கு பிறகு அண்ணாமலை மீண்டும் யாத்திரையை தொடங்கி இருந்த மறு நாளே பிரதமர் அலுவலகத்தில் இருந்து நீங்கள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என அழைப்பு வந்த காரணத்தால் உடனடியாக நேற்று நடக்க இருந்த மயிலம், வானூர் தொகுதிகளில் இருந்த பாத்தியாத்திரையை தள்ளி வைத்து விட்டு உடனடியாக கிளம்பினார் அண்ணாமலை.இப்படி பட்ட சூழலில் நேற்று பிரதமர் மோடியை சந்திக்க அண்ணாமலைக்கு சிறிது நேரம் கிடைத்த நிலையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து தெளிவாக அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார், அப்போது திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கும் அதே நிலையில் அதிமுக மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
ஊழல் மீதான நடவடிக்கை என்றால் ஏன் அதிமுக தலைவர்கள் மீது இல்லை என்ற கேள்வி எழும் நிலை உண்டாகி இருக்கிறது, தெலுங்கானா மாநிலத்தில் நம் உழைப்பு காங்கிரஸ் கட்சிக்கு சென்றது போல் தமிழகத்தில் ஆளும் கட்சியின் மீதான எதிர்ப்பு மன நிலை அதிமுகவிற்கு சாதகமாக மாறமல் உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை அண்ணாமலை கூறியதாக கூறப்படுகிறது.இது குறித்து உடனடியாக பிரதமர் மோடி அதிமுக குறித்தும் இனி நேரடியாக விமர்சனம் வைக்கவும் ஊழல் குறித்து நேரடியாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் உத்தரவு போட்டு இருக்கிறாராம், இனி வரும் நாட்களில் தமிழகத்தில் ஊழல் புகாரில் சிக்கிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது நேரடியாக நடவடிக்கை இருக்கும் எனவும் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது போன்று தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த சில அமைச்சர்களும் சிறை செல்ல நேரிடலாம் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடி அண்ணாமலை மூன்று உத்தரவு போட்டு இருக்கிறாராம், ஊழல் குறித்து நேரடியாக கட்சி வித்தியாசம் இன்றி தமிழக மக்களிடம் கொண்டு செல்லுங்கள், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்கள், குறிப்பாக என் மண் என் மக்கள் யாத்திரையில் கள நிலவரத்தை நேரடியாக அனுப்பி வைக்கவும் உத்தரவு போட்டு இருக்கிறாராம்.எனவே இனி வரும் நாட்களில் தமிழக அரசியலில் பாஜக நேரடியாக திமுகவை எதிர்ப்பது போல் அதிமுகவையும் நேரடியாக விமர்சனம் செய்ய அதிரடியாக களம் இறங்க போகிறதாம்.