திரையுலக நடிகைகளின் வாழ்வு வெளியில் இருந்து பார்ப்பதற்கு தான் ஆடம்பரமாகவும் அழகாகவும் தெரியும். ஆனால் அவர்கள் படும் அவஸ்தைகள் அவ்வப்போது செய்திகளாக வெளியில் வந்ததற்கு பிறகுதான் எவ்வளவு சிரமமான வாழ்க்கையில அவர்கள் வாழ்கிறார்கள் என புரியவரும். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய திரையுலகில் இதுபோன்று பல நடிகைகள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை அவ்வப்போது கூறி உள்ளனர், எனக்கு நியாயம் வேண்டும்! என்னால் இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லை! என்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது போன்ற பல கதறல்கள் பல சமயங்களில் வீடியோக்களாக வெளிவந்துள்ளது. இந்த நிலையில் நடிகை வைஷ்ணவி தன்ராஜ் வெளியிட்ட வீடியோ தான் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய வைரலாக உலா வருகிறது, நாக்பூரில் பிறந்த வைஷ்ணவி தன்ராஜ் திரைப்படங்கள் மற்றும் சின்ன திரை தொடர்களில் நடித்து வந்தார்.
2008 மூலம் நடிக்க ஆரம்பித்த வைஷ்ணவி தன்ராஜ் அவ்வப்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார், துப்பறியும் சிஐடி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த இவருக்கு வட இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.இப்படி நடிப்பில் தனது முழு திறமையும் வெளிக்காட்டி ஜெயித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி தன்ராஜிற்கு குடும்ப வாழ்க்கை என்பது மிகவும் வன்முறைகள் நிறைந்ததாக அமைந்தது. திருமணத்திற்குப் பிறகு நடிகை வைஷ்ணவி தன்ராஜ் உடல் ரீதியாக பல வன்முறைக்கு ஆளானார், அதாவது 2016 ஆம் ஆண்டு நடிகர் நிதின் ஷராவத்தை திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி தன்ராஜிற்கு தனது படத்தைப் போலவே நிஜத்திலும் பல வன்முறைகளையும் ஆக்சன் களையும் சந்திக்க நேர்ந்தது.
இதனை வைஷ்ணவி தன்ராஜை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது தெரிவித்துள்ளார், எனது திருமண வாழ்க்கையில் மிகவும் வன்முறைகளால் நிறைந்தது! இதனால் அவரை விவாகரத்து செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் வைஷ்ணவி தன்ராஜ் அந்த நிகழ்ச்சியில் என் கணவர் என் உயிரை மட்டும் தான் எடுக்கவில்லை அதை தவிர அதிக ரத்தம் வரும் அளவிற்கு உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் என்னை மிகவும் துன்புறுத்தி விட்டார் அதனால் தான் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் கூறினார். இப்படி கிரைம் டிராமா ஷோக்களின் சி ஐ டி இன்ஸ்பெக்டராக பிரபலமான நடிகை வைஷ்ணவி தன்ராஜ் தன் குடும்ப வாழ்க்கையால் மிகவும் துன்புற்ற இந்த நிலையில் இவர் தனது சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உதவி கேட்டு கெஞ்சி உள்ளார், அது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் 'ஹலோ நான் வைஷ்ணவி தன்ராஜ்! எனக்கு இப்பொழுது உதவி தேவைப்படுகிறது நான் தற்போது காய்ஸ்மிரா காவல் நிலையத்தில் இருக்கிறேன் என்றும் அவர் தனது குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாகவும் தயவு செய்து எனக்கு உங்களின் அனைவரின் உதவி தேவை என்றும் ஊடகங்கள் செய்தி சேனல்கள் மற்றும் தொழில்துறையினர் அனைவரும் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைஷ்ணவி தன்ராஜ் பதிவிட்ட இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் வைஷ்ணவி தன்ராஜின் புகாரை பெற்றுக் கொண்டு அவருடைய தாய் மற்றும் சகோதரனை அழைத்து எச்சரித்துள்ளனர். இப்படி திரையுலகை சேர்ந்த ஒரு நடிகை தனக்கு கொடுமை நடக்கிறது என தைரியமாக வீடியோவில் பதிவிட்டு அதனை வெளியிட்டு வைரலாகியதன் மூலம் தற்போது அவர் மேலும் பிரபலமாகியுள்ளார். துப்பறியும் கதாபாத்திரங்கள் மூலம் இவர் அறியப்பட்டாலும் இவருக்கு மற்றுமொரு கொடுமையான வாழ்கை இருப்பதை கண்டு இணையத்தில் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.