
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தற்போதே தொடங்கிவிட்டது போல தெரிகிறது. ஏனெனில் அடுத்தடுத்து வரும் செய்திகள் அதைத் தான் உணர்த்துகின்றன.ஒருபுறம் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, வேலைகளை துவக்க ஆரம்பித்துவிட்டது திமுக தரப்பில் கிலியை உண்டாக்கியுள்ளது. எப்படியாவது அதிமுக பா.ஜ.க கூட்டணி அமையக்கூடாது என ஊடகங்கள் வேலை பார்த்து வந்தது. தமிழகத்தில் இருக்கும் பிரச்சனைகளை குறித்து பேசாமல் எப்போதும் கூட்டணி குறித்து தான் விவாதித்து வருகின்றது. இதற்கிடையே திமுக ரகசிய சர்வே நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் நோக்கம் என்பது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எங்கெல்லாம் நாம் பலவீனமாக இருக்கிறோம் என ஆராயப்பட்டுள்ளது.ஒட்டு மொத்த தமிழகமும் பலவீனமாகத்தான் உள்ளோம் என திமுகவினர் கொடுத்த ரிப்போர்ட்டில் இருந்துள்ளது. இது தலைமைக்கு பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இதற்கான பென் உள்ளிட்ட அரசியல் வியூக நிறுவனங்களை பயன்படுத்தியதாக தெரிகிறது. மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள். இதில் 118 இடங்களை கைப்பற்றும் கட்சியே தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி கட்டிலில் அமரும்.கடைசியாக நடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்த திமுக 133 இடங்களையும், 37.70 சதவீத வாக்குகளையும் வென்றது அதிமுக 3 சதவீதம் மட்டுமே பின்தங்கியது.
மேலும் இந்த முறை திமுக அரசின் மீது மக்கள் அதிக அதிருப்தியில் உள்ளதால் திமுகவின் வாக்கு சதவீதம் மொத்தமாக குறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் தென் தமிழகத்தில் பாஜகவின் அசுர வளர்ச்சி நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்ட பதவி அதிமுக கூட்டணி போன்றவை திமுக தலையில் இடியை இறக்கியுள்ளது.மேலும் டிடிவி தினகரன் மீதான வழக்கை ரத்து செய்து அவருடன் எடப்பாடி நெருக்கமாகி உள்ளார். இதனால் அந்த பிரச்சனையும் கிளியர். கொங்கு மண்டலத்தில் அதிமுக பாஜக எப்போதும் பலமாக இருக்கும்.கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட இரு கட்சிகளின் கையே ஓங்கியிருந்தது மேலும் தமிழகத்தில் திமுகவின் தனிப்பட்ட செல்வாக்கும் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. . திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் பால்விலை மின்சார கட்டணம்,மற்றும் சொத்து வரி அதிகரிப்பு,அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் என்பது மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலையேற்றம் ஒருபுறம் என்றால் போதை பொருள் புழக்கம் அதிகமாகி இளைஞர்களை சீரழித்து வருகிறது. குறிப்பாக போதை பொருள் கடத்தலில் திமுகவில் மாவட்ட பொறுப்பில் இருந்தஜாபர் சாதிக் தான் போதை பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டார்.அடுத்து டாஸ்மாக் பிரச்சனை எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் கொங்கு பகுதியில் புதிதாக முளைத்துள்ள மனமகிழ் மன்றங்கள் என தமிழகம் சீரழிக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் தோறும் நடைபெற்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.அதிலும் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதில் திமுக அனுதாபி தான் சிக்கினான்.இதனை தொடர்ந்து கொலை கொள்ளை சம்பவங்களும் குறையவில்லை.
திமுக மீது குற்றம் சொல்பவர்கள் மீது வழக்கு கைது, கோவையில் கார் குண்டு வெடிப்பு, தீவிரவாதி இறுதி ஊர்வலத்துக்கு பாதுகாப்பு என திமுக ஆட்சியின் அலங்கோலங்களை பட்டியலிட முடியாமல் தவித்து வருகிறார்கள்.2026 ஆம் ஆண்டு எப்போ தான் வரும் என நாட்களை எண்ணி வருகிறார்கள்.. . இதற்கிடையில் 2019, 2024 மக்களவை தேர்தல் வெற்றிகளை வைத்து கணக்கு போட முடியாது. ஏனெனில் மக்களவை தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என்ற பார்வை தமிழக மக்களிடையே இருக்கிறது. இதற்கு மு.க.ஸ்டாலின் வேறு சில வியூகங்களையும் வகுக்க வேண்டிய தேவையுள்ளது.