
ஆளுநர் குறித்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு சாதகமா தீர்ப்பு வந்ததை திமுகவினர் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். மேலும் சட்டம்வ வென்றது நீதி வென்றது ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என கொண்டாடி வந்த நிலையில் துணை குடியரசு தலைவர் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்துக்களை பதிவு செய்தார் இதற்கு முதல்வர் ஸ்டாலின் முந்தி கொண்டு சட்டம் அனைவருக்கும் சமம் என வாயை விட்டு தற்போது மாட்டி கொண்டுள்ளார்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் ஏன் உச்சநீதிமன்றம் கொடுத்த 10 சதவீத இட ஒதுக்கீடை தமிழகத்தில் அமல்படுத்தவில்லை. நீட் குறித்த உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏன் மதிக்கவில்லை அது மட்டுமா பொன்முடி விஷயத்தில் நீதிமன்றம் கூறியும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என முதல்வர் தலையில் இடியை இறக்கி வருகிறார்கள்.
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் திமுகவுக்கு அடுத்த நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்பி கல்யாணசுந்தரம் திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் நடந்த அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால் வேறு விதமாகத்தான் பிறக்கும் என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் கண்ணியமாக பேச வேண்டுமென நேற்று தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் தற்போது இவரது பேச்சால் சர்ச்சை எழுந்திருக்கிறது.
திராவிட மாடல் அரசின் வனத்துறை அமைச்சர் பொன்முடி, சைவ - வைணவ சின்னங்களை விலைமாதோடு ஒப்பிட்டு ஆபாசமாகவும், அருவருப்பாகவும், இழிவுபடுத்தியும் பேசிய பேச்சு பெண்கள் மற்றும் ஹிந்துக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.வயதில் மட்டுமல்ல... கட்சியின் மூத்த உறுப்பினர், துணை பொதுச்செயலர், அமைச்சர் என பல பொறுப்புகளை வகிக்கும் ஒருவர், பொது நிகழ்வில் இப்படி பேசியுள்ளது, அவரது அகத்தின் அழுக்கையே காட்டுகிறது இதைப்போன்றே நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சியினரை குறிப்பிடும் போது, மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தை உருவகேலி செய்து, வாய்க்கு வந்தபடி கீழ்த்தரமாக பேசினார்.
அதற்கு கண்டனம் எழுந்ததும் ஒப்புக்கு வருத்தம் தெரிவித்து, ஒரு கபட நாடகமாடினார் ஆட்சியில் இருக்கும் ஆணவமே, இப்படியெல்லாம் பேச வைக்கிறது.இது குறித்து எல்லாம் ஊடகங்கள் பேச மறுத்து வருகிறது. எப்போது பார்த்தாலும் அதிமுக பாஜக கூட்டணி குறித்து தான் பேசி திசைதிருப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் திமுக அமைச்சர்களின் ஆபாச பேச்சுக்கு மக்களிடையே நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் பொன்முடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.. இன்னொரு பக்கம் சென்னை ஐகோர்ட்டும், பொன்முடியை கடுமையாக கண்டித்தது. இவ்வளவு ஆபாசமாக வேறு யாராவது பேசி இருந்தால், போலீசார் எத்தனையோ வழக்குகள் போட்டிருப்பர். அமைச்சர் என்றால் விதிவிலக்கா? யாருமே புகார் அளிக்காவிட்டாலும், பொன்முடி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அரசு அனுமதி தராததால் போலீஸ் அமைதியாக இருக்கிறது.
ஐகோர்ட்டே உத்தரவிட்டும், முதல்வர் அனுமதி அளிக்காமல் இருக்க என்ன காரணம் என்று, பல ஊகங்கள் உலா வருகின்றன. பொன்முடி மட்டுமல்ல, பல அமைச்சர்கள் அடிக்கடி நாவடக்கம் இல்லாமல் பேசி, சர்ச்சையில் சிக்குகின்றனர். இப்போது பொன்முடி மீது நடவடிக்கை எடுத்தால், அடுத்து வரிசையாக பல அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரலாம் என்பதால், அவர் தயங்குவதாக கூறப்படுகிறதுசட்டம் அனைவருக்கும் சமம் முதல்வர் ஸ்டாலின் அவர்களே..