
தமிழக பாஜகவின் தலைவராகியிருக்கும் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிடப்பட்டு, 17-ந்தேதி சென்னையில் இருந்து அவரது பயணம் தொடங்கியுள்ளது. கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார், புதிய தலைவருக்கு வரவேற்பு அளிக்கும் பொதுக்கூட்டமாக இது நடத்தப்படுகிறது. அவருக்கு கட்சியின் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை யில் கட்சி நிர்வாகிகளை சந்திக்க கோவை சென்றார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் . காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை மண்டல பாஜக சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது நயினார் வருவதற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்த நிகழ்ச்சிக்காக நயினார் நாகேந்திரனை வரவேற்று வழநெடுக பேனர்கள் வைக்கப்பட்டன.
நயினாரை சாரட் வண்டி வைத்து எல்லாம் வரவேற்று அதளப்படுத்தியிருந்தனர்.மத்திய அமைச்சர் எல். முருகன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை குறித்து அனைவருமே பாராட்டி பேசினார்கள்.அவர் பெயர் குறிப்பிடும்போது எல்லாம் தொண்டர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். இதை கவனித்த நயினார் நாகேந்திரன், “ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு. ஆனால், ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் அண்ணாமலைக்கு இருக்கின்றது.” என்று கூறினார்.ஏற்கனவே அண்ணாமலை பாஜகவின் சொத்து. அவரை யாரும் அசைக்க முடியாது. அண்ணாமலை, என்னிடம் இனி என்னெல்லாம் செய்ய வேண்டும். என பல்வேறு அறிவுரைகளை என்னிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் பேசினார்.
அவர் நம்முடன் பயணிக்க வேண்டும் என்பதை விட, நாம் அனைவரும் அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை நான் தெளிவாக சொல்லி கொள்கிறேன். என கூறியுள்ளார். மேலும் அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை, கேரளாவிலிருந்து தமிழகத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை எடுத்து செல்ல போராட்டம் அறிவித்து அதை மீண்டும் கேரளாவுக்கு கொண்டு சென்ற விஷயம். அனைவருக்கும் சமகல்வி. தற்போது டாஸ்மாக் விவகாரம் என அணைந்து விஷயங்களிலும் அண்ணாமலை அரசுக்கு எதிராக செயல்பட்டு அவரின் கிராப் உயர்ந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், அமித்ஷா ஒரே நாளில் எல்லா வேலையையும் முடித்து விட்டார். அமித்ஷா, ‘நான் அடிக்கடி தமிழகம் வருகிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன்.’ என சொல்லியுள்ளார். அதனால் நாம் நம்முடைய பூத்களில் வேலைகளை பார்த்தால் போதும். அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றம் செல்வோம்.என்றார்மேலும் தமிழகம் முழுவதும் பாஜக மேடைகளில் அண்ணாமலை குறித்து பேசினாலோ அண்ணாமலை பெயரை சொன்னாலோ விசில் சத்தம் பறக்கிறது. மேலும் அண்ணாமலைக்கு மிக பெரிய பொறுப்பு தேசிய தலைமை கொடுக்க உள்ளதால் திராவிட கட்சிகள் பதற்றமடைந்துள்ளது.