24 special

விரைவில் வெடிக்கப்போகும் பிரளயம் கட்சித் தொண்டர்களுக்கு அவசர அவசரமாக முதல்வர் எழுதிய கடிதம்...!

Mksta
Mksta

தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தீவிர வேலைகளில் இறங்கியுள்ள நிலையில் ஆளும் கட்சியான திமுகவில் உட்கட்சி பிரச்சனை வெடித்து உள்ளது. 


அதாவது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ'க்களுக்கும், நகர நிர்வாகி மற்றும் கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி மேயர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல்களும் வாக்குவாதங்களும் மனக்கசப்புகளும் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படி நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் திமுகவில்  பிரச்சனை ஏற்படுவது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட இது எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது திமுகவில் இந்த நிலைமையை தொடருமானால் நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை திமுக கட்சி தாக்கு பிடிக்காது என பல அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். 

திமுகவில் ஒரு பக்கம் கட்சிக்குள்ளேயே பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் வேறு அமலாக்கத்துறை வருமானத்துறை போன்ற ஏஜென்சிகளிடம் சிக்கிக் கொண்டு தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைமை எதை சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி வருகிறது மேலும் சில தினங்களுக்கு முன்பு நீட் பிரச்சனை மற்றும் ஆளுநருடன் வாக்குவாதம் போன்றவற்றால் திமுக சற்று பின்தங்கிய நிலையில் தான் உள்ளது என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

மறுபக்கம் வேலூரில் திமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் மேயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் கட்சியில் இருக்கும் ஒற்றுமை இல்லா தன்மையை படம் போட்டு காட்டிய நிலையில் திமுக தலைமைக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.  

இதனால் கட்சி சீர்கெட்டு கிடைப்பதை நினைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்அதாவது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் அடுத்து வரும் தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வருகிறார். 

ஆனால் கட்சியில் தொண்டர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது கட்சியை பலவீனப்படுத்தும் என்பதால்  அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தான் நான் இருக்கிறேன் என்று கூறியதோடு முதல்வராக பதவியேற்றதிலிருந்து  அனைத்திலும் வெற்றி வெற்றி மகத்தான வெற்றிதான் அதேபோல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றியை கைப்பற்ற வேண்டும் அதோடு மட்டுமல்லாமல் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும்  அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் மத்திய அரசில் கட்டாயமாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தான் இந்தியா என்ற கூட்டணியில் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளோம் என்றும் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் மதத்தை வைத்து ஆட்சி செய்யும் இருள் நிறைந்த ஆட்சியை மாற்றி விடியல் ஆட்சியாக தற்போது பாஜகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய கூட்டணி தான் இந்தியாவுக்கு வெளிச்சத்தை தரப்போகிறது என்றும்  நாடாளுமன்ற தேர்தல் விடியல் தருகின்ற தேர்தலாக அமையும் எனவே இதை அனைத்திற்கும் தொண்டர்களாகிய நீங்கள் தான் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் தற்போது திமுகவை எதிர்க்க களத்தில் பாஜகவுடன் அதிமுகவும் சேர்ந்து கொண்டதால் வரும் தேர்தலில் திமுகவிற்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்ற திமுக தலைமைக்கு அவசர உளவுத்துறை அறிக்கை பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது சண்டையிட்டுக்கொண்டிருக்கும் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.