மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை மற்றும் மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது எழுப்பப்பட்ட மோசடிப்புகார்களுக்கு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த கைதிற்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் வழக்கு பதியப்பட்டது அதனை அமலாக்கத்துறை முறியடித்து தனது காவலில் எடுத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில் கடந்த ஆட்சி காலத்தில் செய்த மோசடி குறித்த கேள்விகளும் அதை தொடர்புடையவர்கள் மற்றும் மோசடி செய்யப்பட்ட பணம் குறித்த கேள்விகள் அனைத்தும் கேட்கப்பட்டுள்ளது.
அனைத்திற்கும் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விவரங்களும் தனது சகோதரருக்கே தெரியும் என்று தெரிவித்தார். இதற்கிடையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் அவரிடம் இருந்த இரண்டு பொறுப்புகளும் பறிக்கப்பட்டது இருப்பினும் அவர் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக தொடர்ந்து வருகிறார். இவர் அமைச்சர் என்ற ஒரு காரணத்திற்காகவே சிறையில் முதல் வகுப்பு கைதியாக கைது செய்யப்பட்டு சகல வசதிகளுடன் சிறை வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.
செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை 3000 பக்கம் கொண்ட வழக்கு ஆவணங்களையும் மேலும் 120 பக்க குற்ற பத்திரிகையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதற்குப் பிறகு அமைச்சர்கள் மீதான விசாரணையை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு செந்தில் பாலாஜியின் வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களை பெற்ற சிறப்பு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு ஆஜர் படுத்தும் படி சிறை துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார் இவரது விசாரணை நீதிபதி கே. ரவி முன்பு முன்வைக்கப்பட்டது.
இந்த சூழலில் கடந்த முறை நீதிமன்றத்தின் காவலுக்காக செந்தில் பாலாஜி வந்த பொழுது எந்த ஒரு ஒப்பனைகளும் செய்து கொள்ளாமல் தாடியுடன் சோகத்தில் வந்திருந்தார் அதன் இறுதியில், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை இருப்பார் என்று தீர்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த முறை எப்படியாவது நீதிமன்ற காவலில் இருந்து தாம் விடுவிக்கப்படுவோம் என்று நினைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தரப்பும் நீதிமன்ற காவல் இருந்து செந்தில் பாலாஜியை எடுத்துவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்து வந்தது,
இதனால் செந்தில் பாலாஜி மிகுந்த நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக முகத்தில் இருந்த தாடி அனைத்தையும் எடுத்துவிட்டு பளிச்சென்று வெள்ளை சட்டை வேட்டியுடன் வந்திருந்தார்.
இருப்பினும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி கே. ரவி உத்திரவிட்டார் அதோடு அன்றைய தினம் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக ஆஜர் படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். அதனை அடுத்து அழைத்து வந்த போலீஸ் வாகனத்திலேயே செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது அமலாக்க துறைக்கு மற்றுமொரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் இன்னும் அதிகமாக மேற்கொள்ளலாம் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் இருந்து சோகத்துடன் புழல் திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இந்த வழக்கு நாளுக்கு நாள் சிக்கலாகிக்கொண்டே செல்கிறது எனவும் சில சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.