24 special

விரட்டும் வழக்குகள் அலறியடித்து அறிவாலயம் நடத்த போகும் அவசர கூட்டம்.....!

arivalayam, mk stalin
arivalayam, mk stalin

தற்போது வழக்கில் இருக்கும் அமைச்சர்களின் பட்டியல் என்ற தரவுகளைத் தேடும் பொழுது பெரும்பாலானவர்களாக இருப்பவர்கள் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள். அந்த அளவிற்கு சமீபகாலமாக திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகள் அதிகரித்து வருகிறது முன்பு புதைந்த வழக்குகள் கூட மறுபடியும் இப்பொழுது துளிர் விட்டு வளர ஆரம்பிக்கிறது. முதலில் இந்த வரிசையை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் அவர் கடந்த ஆட்சி காலத்தில் செய்த மோசடிக்காக அமலாக்க துறையிடம் மாட்டி தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார், இவருக்கு அடுத்ததாக அமைச்சர் பொன்முடி தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி தற்போது அவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 


இப்படி திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் நீதிமன்ற வழக்குகளில் மாட்டி வருவது திமுகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது இவர்களுக்கெல்லாம் முன்பாக 2ஜி வழக்கில் ஆ ராசா மற்றும் கனிமொழி சிக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2006 முதல் 2011 வரை திமுகவின் ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளதாக இருவர் மீதும் தனித்தனி வழக்குகள் பதியப்பட்டது. அதற்குப் பிறகு இந்த வழக்கு இரு அமைச்சர்களுக்கும் சாதகமாக வந்து முடிவை கண்டது. இருப்பினும் தற்பொழுது இந்த வழக்கில் முரண்பாடு இருப்பதாக கருதி ஒரு நீதிபதியே மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க முன்வந்துள்ளார்.

இப்படி தொடர்ச்சியாக திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் வழக்குகளை சிக்கி தவிக்கின்ற நிலையில் இன்னும் அதிக திமுக அமைச்சர்கள் மீது வழக்குகள் பாயலாம் என்று அண்ணாமலை கூறியுள்ளார் இதனால் திமுக தற்போது சற்று ஆட்டம் கண்டுள்ளது! இந்த நேரத்தில் இன்னும் ஆறு மாத காலத்தில் தேர்தல் வர உள்ளதால் அமைச்சர்கள் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கு குறிப்பாக இந்த வழக்குகளில் நம் தரப்பிலிருந்து என்ன செய்யலாம், ஒருவேளை விசாரணையின் முடிவில் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை கைது செய்யாமல் இருக்க என்ன செய்யலாம் அதற்கு முன்பாக என்ன செய்யலாம் என்று பல கேள்விகளுக்கு ஆலோசனைகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்ய திமுகவின் வழக்கறிஞர் அணி ஆலோசிக்க கூட்டம் ஒன்றை கூட்ட உள்ளது. அதாவது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக புதிய நிர்வாகிகளின் அறிமுகத்திற்காக திமுகவின் வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஹோட்டல் ஃபயஸ் மஹாலில் செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற உள்ளதாக திமுகவின் சட்டத்துறை செயலாளர் என் ஆர் இளங்கோ எம்பி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண் துடைப்பிற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாட திமுகவின் வழக்கறிஞர்கள் கூடுவதாக கூறப்பட்டாலும் இதற்கான உண்மையான காரணம் தொடர்ந்து திமுகவின் அமைச்சர்கள் வழக்குகளை சிக்குகின்றனர் இதனால் இதற்கு மேல் யாரும் சிக்காமல் இருப்பதற்காகவும் ஒரு வேலை முடிந்த வழக்குகள் மறுபடியும் துளிர்விடாமலும் இருப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் திமுக வழக்கறிஞர்கள் ஒன்று கூடும் இந்தக் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தல் பற்றிய ஆலோசனைகளும் வழக்குகளில் செய்யவேண்டிய நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் என்று சில தகவல்கள் கசிகின்றன...