
இந்தியாவிலுள்ள அனைத்து கட்சிகளும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்காக கூட்டணி கட்சிகளாக உருவாகி தேர்தல் களத்தில் போட்டியிட தயாராக உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் அதற்கான களப்பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். அந்த வகையில் 26 எதிர் கட்சிகள் இந்தியா என்ற பெயரில் ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பல திட்டங்களையும் வியூகங்களையும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறது.
இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீனவச் சங்கங்களுக்கு திட்டங்களை அறிவிப்பது நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
ஆனால் இவற்றிற்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கும் விதமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் அதாவது சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாய் குறைத்து விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார் இதனால் நடுத்தர மக்கள் மற்றும் பாமர மக்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று பல பேச்சுக்கள் எழுந்துள்ளன, இதனை தொடர்ந்து வணிக சிலிண்டர் விலையும் 157 ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையும் குறையும் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது மேலும் எதிர்பாராத அறிவிப்புகளும் வெளியாக உள்ள நிலையில் டெல்லி மேலிடத்தில் இருந்து மக்களுக்கு பயனுள்ள வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
இவ்வாறு பாரத பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக சிலிண்டர் எரிவாயுவின் விடையை 200 ரூபாய்க்கு குறைத்ததால் எதிர்க்கட்சிகளின் கதறல் ஆரம்பித்துவிட்டது என்று கூறலாம் ஏனென்றால் பிரதமர் இந்த திட்டத்தை அறிவித்ததும் எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் இதைப் பற்றியே விமர்சித்து வருகின்றனர்.
காரணம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் வாக்கு வங்கி பாஜகவிற்கு சாதகமாக அதிகரித்து விடுமோ என்ற பயத்தில் சமூக வலைதளங்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இதுவரை அறிவிக்காமல் தற்போது இந்த திட்டத்தை அறிவித்தது தேர்தலை கணக்கில் வைத்து தான் என்ற செய்தியையும் இடதுசாரி சார்பில் பரப்புரை செய்து வருகின்றனர்.
மேலும் பாரத பிரதமர் இந்த திட்டத்தை அறிவித்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இதனால் எதிர்க்கட்சிகள் தேர்தலில் மக்களின் வாக்கு வங்கியை ஈர்ப்பதற்கு செய்த செயல்கள் எல்லாம் வீணாகி போய்விட்டதே என்று புலம்பி வருகின்றனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் இந்த திட்டத்தை குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் கேலி செய்து வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டது வேறு இடதுசாரி கூட்டணிகள் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. 'அதாவது தேர்தல் வருவதற்கு என்ன அறிகுறி என்றால் 200 ரூபாய் குறைத்தது தான் அறிகுறி என்றும் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் விழித்துக் கொண்ட அரசை பாருங்கள் என்றும் விரைவில் வெள்ளித்திரையில் பார்ப்பீர்கள் பெட்ரோல் டீசலின் விலையும் குறையும்’ என்று பதிவிட்டு இருந்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது திட்டத்தில் வைத்திருக்கும் முழு அஸ்திரத்தையும் இன்னும் இறக்கி வைக்கவில்லை அவர் அதில் ஒரு பங்கை மட்டும் தான் வெளியிட்டுள்ளார். இதற்கே எதிர்க்கட்சிகளின் கதறல் தொடங்கிவிட்டது அதன் விளைவாக தான் ப.சிதம்பரம் பாரத பிரதமர் மோடி அறிவித்த திட்டத்தை குறித்து கேலி செய்து பேசியுள்ளார் என பாஜகவினர் தரப்பில் கூறப்படுகிறது..