தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவி கொடுத்த பேட்டி தற்போது ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசு நவோதையா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார் இது குறித்து பொதுமக்கள் மத்தியில் கருத்து கேட்கப்பட்டது அப்போது பள்ளி மாணவி ஒருவர் பேட்டி கொடுத்த பேட்டியில், இந்தி மொழி இருக்கிறது என்பதற்காக நவோதையா பள்ளிகளை மாநில அரசு அனுமதிக்காதது தவறு.
இந்தி மொழியை கற்று கொள்வது அவசியம் நான் இப்போது cbse பள்ளியில் படிக்கிறேன் எனக்கு இந்தி கற்று கொடுக்கிறார்கள் இதன் மூலம் என்னால் நம் மாநிலத்தை கடந்தும் பேச முடியும், இதே போன்று நவோதையா பள்ளிகள் தமிழகத்தில் வந்தால் ஏழை மாணவர்களும் பயன் பெருவார்கள் என கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்கள்தான் எதை படிக்க வேண்டும் எனதீர்மானிக்க வேண்டுமே தவிர அரசாங்கம் பள்ளியை அனுமதிக்க மாட்டேன் என கூறுவது தவறு என பல கல்வியாளர்கள் கூறிய நிலையில் மாணவி கொடுத்த பேட்டி மாநிலம் முழுவதும் அதிர செய்துள்ளது.
மாணவியின் பேச்சை தற்போது வெளிநாடு சென்றுள்ள முதல்வருக்கு அனுப்பும் பணியில் பலரும் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.