இந்தியாவின் அடையாளமாக திகழ போகும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகின்ற 28-ம் தேதி திறந்து வைக்க இருக்கும் நிலையில் அங்கு தமிழ்நாட்டை சேர்ந்த சோழர்கள் அடையாளமான செங்கோல் நிறுவப்படும் என வெளியான அறிவிப்பு பெரும் பரபரப்பை உண்டாக்கியா நிலையில் இது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த சூழலில் இன்று தமிழக ஆளுநர் மாளிகையில் மூன்று மாநில ஆளுநர்கள் தமிழிசை, எல். கணேசன், ஆர் என் ரவி மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்
அதில் சோழர்களின் அடையாளமாக திகழ்ந்த செங்கோல் காணாமல் போன நிலையில் பெண் ஆய்வாளடர் ஒருவர் பிரதமரிடம் கோரிக்கை வைக்க aஅது கண்டறியபட்டது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமாக குறிப்பிட்டார்.
அதன் பிறகு அவர் வெளியிட்ட வீடியோ மிக பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது அதிலும் குறிப்பாக செங்கோல் எப்படி நேரு கைக்கு கிடைத்தது என்ற வீடியோ பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. செங்கோல் பற்றிய வரலாறு தெரியவர உடனடியாக பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை வைக்க உத்தரவு போட்டு இருக்கிறாராம்.இது குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட வரலாறு வீடியோ இதோ...!