24 special

பிரக்ஞானந்தாவுக்கு ஓடி வந்து உதவிய ஆனந்த் மகேந்திரா....! பதுங்கி ஒளிந்த தமிழ் திரையுலக போராளிகள்...!

Anand mahendra, praggnanandhaa
Anand mahendra, praggnanandhaa

தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா தனது 18 வயதிலேயே இளம் செஸ் வீரராக இருந்து வருகிறார் மேலும் உலக அளவில் சாதனை படைத்த செஸ் வீரர்களுடன் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். 


சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் போட்டி அஜர்பைஜானில் நடைபெற்றது மேலும் இந்த செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா முதல் சுற்று அரையிறுதி சுற்று ஆகியவற்றில் சக வீரர்களுடன் சரிக்கு சமமாக போட்டுவிட்டு வெற்றி பெற்று இறுதிச்சுற்றை அடைந்தார். ஆனால் அரை இறுதி சுற்றி வரை பிரக்ஞானந்தா வந்து நின்று ஆடியதால் சக போட்டியாளர்களிடம் கடும் போட்டி நிலவியதால் சற்று சிரமப்பட்டு தான் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இறுதிச்சுற்றில் உலக செஸ் சாம்பியன் ஆன மேக்னஸ் கார்ல்சன்  உடன் இறுதி வரை போட்டியிட்டு வெள்ளி பதக்கத்தை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.மேலும் உலகில் நம்பர் ஒன் ஆக விளங்கும்  மேக்னஸ் கால்சனுடன் இறுதி வரை விட்டுக் கொடுக்காமல் போராடிய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி முதல் இந்தியாவின் அனைத்து தலைவர்களும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். 

இது மட்டுமல்லாமல் 18 வயதிலேயே செஸ் போட்டியில் திறமையாக விளங்கும் பிரக்ஞானந்தாவுக்கு பல பரிசுகளையும் அளித்து அவரை ஊக்கமளித்தனர் மேலும் சிறு வயதிலேயே இது மாதிரியான போட்டிகளில் பங்கேற்று உலக அளவில் சாதனை படைக்க வைத்த பிரகானந்தாவின் பெற்றோர்களுக்கும் தொடர் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

மேலும் பிரக்ஞானந்தாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் பெயர் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பிரபல தொழிலதிபரும் மஹிந்திரா நிறுவன உரிமையாளருமான ஆனந்த் மகேந்திரா பல கோடி மதிப்புடைய காரை  பிரக்ஞானந்தா குடும்பத்திற்கு பரிசளிப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் தனது ட்விட்டர் பதிவில்  ஒரு கோடிக்கும் மேலான ட்விட்டர் பயனாளர்கள் பிரக்ஞானந்தாவுக்கு விலைமதிப்பு மிக்க காரை பரிசளிக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்திருந்த நிலையில் ஆனந்த் மகேந்திரா பிரக்ஞானந்தா பெற்றோருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 400  காரை பரிசளிக்க போவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் இவர் தனது பதிவில் குழந்தைகளை உலகச் சாம்பியன் செஸ் போட்டி வரை உற்சாகப்படுத்தி தயார் செய்தது பெற்றோர்கள் அவர்கள் தான் பிரக்னஞாந்தாவுக்கு உறுதுணையாகவும் இறுதிவரை இருந்தனர் எனவே அவர்களுக்கு இந்த காரை பரிசளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.உலக சாம்பியன் போட்டி தொடரில் வெள்ளி பதக்கத்தை வென்ற பிரக்ஞானந்தா அடுத்த ஆண்டு கனடாவில் நடக்க இருக்கும் கேண்டிடேட் செஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடப்பட்டது. 

இதோடு டபுள் ஷாக் கொடுக்கும் விதமாக  மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் பிரக்ஞானந்தாவின் குடும்பத்திற்கு உயர்தர காரை பரிசளிப்பதாக அறிவித்துள்ளார் ஆனால் தமிழகத்தில் ஏதோ அரசியல் காரணங்களுக்காக புரட்சி பேசும் சூர்யா, விஜய் சேதுபதி, ஜோதிகா, சித்தார்த் மற்றும் சத்யராஜ் ஆகியோர் தமிழன் தமிழன் என்று கூறிக்கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பிரக்னானந்தாவுக்கு என்ன செய்தார்கள் என இணையதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் இவர்கள் தமிழன் என்றும் புரட்சி என்றும் பேசி விளம்பரம் தேடிக்கொண்டு தமிழ் மாநிலத்தின் சாதனை பிள்ளையாகிய பிரக்ஞானந்தாவிற்கு ஒரு உதவி கூட செய்யாமல் ஒளிந்து கொண்டனர் என இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஆனந்த் மஹிந்திரா தானாக முன்வந்து பிரக்ஞானந்தாவின் குடும்பத்திற்கு உதவியும் அந்த அறிவிப்பை பார்த்த புரட்சி பேசும் தமிழ் திரையுலக நடிகர்கள் கப்சிப் என்று இருந்து வருகின்றனர். மேலும் இணையவாசிகள் திரையுலக புரட்சி பிரபலங்களை இணையதளத்தில் விடாமல் கேள்விகளை எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது..