இந்தியாவில் வாரணாசிக்கு இணையான பிரசித்தி பெற்ற திருத்தலமாக தமிழகத்தில் ராமேஸ்வரம் திகழ்ந்து வருகிறது. அதோடு நமது நாட்டின் நான்கு திசைகளில் சார் தாம் எனப்படும் நான்கு புனித தலங்கள் இருப்பதாகவும் அதில் இந்த ராமேஸ்வரமும் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாம்பன் பாலம் ராமரின் மனைவியை இராவணன் கடத்திச் சென்றதால் சீதையை மீட்பதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.
மேலும் ராமேஸ்வரத்தின் மையப்பகுதியில் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளதாகவும், இந்த கோவிலில் இருக்கும் சிவனை ராமர் வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றது. இந்துக்களின் முக்கிய சமயங்களாக விளங்குகின்ற சைவம், வைணவம் போன்ற இரு சமயத்தவரும் முதன்மையாக நினைக்கின்ற ஒரு புனித ஸ்தலமாக இராமநாதபுரம் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் தமிழகத்திலிருந்தும் வட இந்தியாவில் இருந்தும் பெரும்பாலான மக்கள் ராமேஸ்வரத்திற்கு பயணித்து அங்கு இருக்கும் சுற்றுலா தளங்களையும் கண்டு கோவிலுக்கு சென்று சிவபெருமானையும் வணங்கி வருகின்றனர்.
இப்படி ஒரு ஆன்மீக புனிதம் நிறைந்த பகுதியில் தற்போது நடந்த ஒரு விஷயத்தால் அப்பகுதி மக்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி அலுவலர் ஒருவர் மது போதையில் காரை ஓட்டி சென்று அங்கிருக்கும் வாகனங்களையும் இடித்து சென்றுள்ளார். அதுவும் அந்த நபர் கோவில் நிர்வாகி என்றும் கூறப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ள ராமநாத சுவாமி கோவிலின் எஸ்.ஓ காரில் சென்ற பொழுது, அவர் எதிரே வந்த சில வாகனங்களை இடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவர் சென்ற வழியில் நின்றிருந்த பைக், கார்கள், சைக்கிள்களை இடித்துவிட்டு மக்கள் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் வேகமாக சென்றுள்ளார்.
இதன் காரணம் என்னவென்று பார்த்தால் அவர் மது போதையில் வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார், உடனே அங்கிருந்த பொதுமக்கள் வண்டியில் துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர்.துரத்தி சென்று மடக்கி பிடித்ததில் இவர் கோவில் நிர்வாகி என தெரியவந்துள்ளது. கோவிலின் நிர்வாகியான இவர் மதுபோதையில் காரை ஓட்டிச்சென்றுள்ளார். கோவிலின் எஸ் ஓ'வான இவரது காரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் திட்டக்குடி என்ற பகுதியில் அவரை பிடித்ததோடு காவல் நிலையத்திடம் புகார் அளித்து அவரை காவலரிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் பக்தியின் இலக்கணமாக மக்கள் சென்று கொண்டிருக்கின்ற பாதையில் இப்படி கோவில் பணிகளை செய்து கொண்டிருக்கும் ஒருவர் மதுபோதையில் உலா வந்தது மிகவும் கண்டிக்கத் தகுந்தது என்ற கருத்துக்களும் தற்போது நிலவி வருகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் சர்ச்சையாக முன்வைக்கப்பட்டு வருகிறது. ஒரு கோவில் அதிகாரி குடித்துவிட்டு கண்மண் தெரியாமல் பிற வாகனங்களை இடித்து போதையில் தன் இஷ்டத்துக்கு சென்றது மேலும் நிற்காமல் மக்கள் விரட்டிப்பிடிக்கும் அளவிற்கு சென்றது மிகவும் தவறானது என்று இந்த நிகழ்ச்சியை கண்ட சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.
மேலும் கோவில் வேலையாக பணியாற்றும் ஒரு அதிகாரி பட்டப்பகலில் குடித்துவிட்டு கண்மண் தெரியாமல் அதுவும் அவர் பணி செய்யும் ஊரிலேயே மப்பில் காரை ஓட்டி வந்தது தவறான செயல் எனவும் இதனை கண்டித்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப சில நாட்களாக கோவில் அதிகாரிகள் கோவிலில் புனிதத்தை குறைக்கும் அளவிற்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும், குறிப்பாக கோவிலை வணங்கும் மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதும், அது சமூக வலைதளங்களில் வைரல் ஆவது குறிப்பிடத்தக்கது. இது போன்ற விஷயங்களால் கோவிலின் புனிதம் கெடுகிறது என்ற கருத்தும் தற்பொழுது அதிகம் எழ துவங்கி உள்ளது.