தற்பொழுது சென்னையில் நிக்ஜாம் புயல் புரட்டி எடுத்து வருகிறது, நிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவம் நேற்று முதலிலே சென்னையை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த புயல் வீசுவது இன்று மாலையாக இருந்தாலும், நேற்று இரவு முதலே புயலின் காரணமாக பெய்து வரும் மழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
சென்னை. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும் அடாது மழை பெய்த காரணத்தினால் மீட்பு பணிகள் வேறு செய்ய முடியாத அளவிற்கு ஆங்காங்கே வெள்ளக்காடாக மாறி நிற்கிறது. குறிப்பாக சென்னையின் மையப் பகுதியான மவுண்ட் ரோடு, தி நகர், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகள் வெள்ளக்காடாக மாறி இருந்தாலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதையும் தாண்டி அதிக அளவில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், தாம்பரம், முடிச்சூர் பகுதி போன்ற பகுதியில் எல்லாம் ஒரு ஆள் உயரத்திற்கு நீர் வீடுகள் இருக்கும் வீதிகளில் ஓடுகிறது, குறிப்பாக அப்பார்ட்மெண்டில் இருப்பவர்கள் மாடிகளில் தஞ்சம் புகுந்தாலும் தரைத்தளத்தில் நிறுத்தி இருந்த கார் மற்றும் பைக் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல் இந்த மழை வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் மீண்டு வருவதற்கு குறைந்தது ஒரு வார காலமாகும் எனவும் கூறப்படுகிறது, கரண்ட் கிடையாது, அதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் தொலைத்தொடர்பு வசதி கிடையாது, மக்கள் சமைப்பதற்கு வழி இல்லை, கடைகள் எங்கும் கிடையாது, வெளியில் ரெடிமேட் உணவு வாங்கலாம் என்றால் உணவகமும் கிடையாது இப்படி சென்னை மக்கள் இத்தனை நாள் இதனால் வரையில் இல்லாத இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என கூறலாம்.
இது மட்டுமல்லாமல் நேற்று காலை எட்டு முப்பது மணியிலிருந்து இன்று மதியம் 1:30 மணி வரை சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சம் மழை பதிவாகியுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் 250 மில்லி மீட்டர் அளவு இருந்ததாகவும் வெதர்மேன் பிரதீப் கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 390 மில்லி மீட்டர் மழை உள்ளதாகவும் இதே போல் 2015 ஆம் ஆண்டு பெரும் வெள்ளத்தின் பெய்த மழையை விட தற்போது அதிகளவில் மழை பெய்துள்ளதா என்று கேள்விக்கு பதில் அளித்தவர் 2015 தான் பெருமழை பெய்தது, தற்போதைய நிக்ஜாம் புயல் 2005 விட அதிக மழைப்பொழிவை கொடுத்துள்ளதாகவும் 20 முதல் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது இப்படி இருக்கையில் சென்னையில் ஆங்காங்கே கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் களத்தில் இறங்கி உதவி செய்ய ஆரம்பித்துவிட்டனர் குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் மக்கள் உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், பாஜகவின் நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக இறங்கி வேலையை துவங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் காரணமாக நிவாரண பணிகள் ஆங்காங்கே முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முதலே முதல்வர் ஸ்டாலின் எங்கும் சென்னையில் வசிக்கும் மக்களுக்கு ஆறுதல் கூறாததும், பார்வையிடாததும் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக எந்த ஒரு மழைக்காலமாக இருந்தாலும் அதுவும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது சென்னை மழை பாதிப்புகளை பார்வையிட ஸ்டாலின் செல்வார். குறைந்தபட்சமாக அவரது கொளத்தூர் தொகுதிக்காவது செல்வார், ஆனால் இந்த முறை எங்கேயுமே மழை பாதிப்புகளை பார்வையிட செல்லவில்லை இதன் காரணமாக மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் எங்கிருக்கிறார்? ஏன் வரவில்லை? என பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இது குறித்து சில அரசியல் விமர்சகர்களிடம் விமர்சித்த பொழுது முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது மிகுந்த அப்செட்டில் இருக்கிறார், அவருக்கு மழை பாதிப்புகளை எல்லாவற்றையும் விட அமலாக்கத்துறை மொத்தமாக நெருங்கி இருப்பதுதான் அவருக்கு பெரும் பயத்தை கொடுத்துள்ளது! இது மட்டுமல்லாமல் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் மூன்று மாநிலத்தை பாஜக பெரும்பான்மையுடன் கைப்பற்றி இருப்பதும் அவருக்கு பயத்தை கொடுத்துள்ளது, இதன் காரணமாகத்தான் முதல்வர் தற்பொழுது வெளியில் வராமல் இருக்கிறார்' என கூறினார்கள்.
ஆனால் திமுக தரப்பில் இது குறித்து விசாரித்த பொழுது முதல்வர் உடல்நிலை காரணத்திற்காக தான் அவர் வரவில்லை, அதன் காரணமாகத்தான் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இருந்து பார்க்கிறார் என கூறினார்கள். ஆனாலும் சென்னை மக்கள் முதல்வர் ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.