தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். தற்போது உடல்நிலை தொய்வு காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். அவருக்கு வென்டிலேட்டரை எடுத்துவிட்டால் மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் வருத்தத்தில் இருந்து விஜயகாந்துக்கு பிரார்த்தனை செய்து வந்தனர். திரை பிரபலங்கள் பலரும் அறிக்கை மூலமும் நேரில் சென்றும் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய், சுறாவுக்கு மக்கள் இடத்தில பெயர் வாங்கி கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் இருவரும் விஜயகாந்துக்கு தொலைபேசியில் அழைத்தோ அல்லது நேரில் சென்றோ பார்க்கவில்லை என அவரது ரசிகர்களே அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
நடிகர் விஜய்க்கு செந்தூரப்பாண்டி, வெற்றி என இரண்டு படங்களிலும் சூர்யாவுக்கு பெரியண்ணா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இருவரும் திரையுலகில் உச்சத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் இப்பொது அவர் தீவிர சிகிச்சையில் இருக்கும்போது மட்டும் ஏன் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என குற்ற சட்டு எழுந்த நிலையில், நடிகர் சூர்யா சுதாரித்து கொண்டு இணையத்தளத்தில் நலம் பெற வேண்டி பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சூர்யா பதிவில் ”அண்ணன் விஜயகாந்த் விரைவில் நலம் பெறப் பிரார்த்தனை செய்யும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.! கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் விஜயகாந்தை குணமாக்க உதவும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!” என நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் மட்டும் கல்நெஞ்சம் கொண்டவராக ஏன் இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் அன்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய் இப்போது இவ்வளவு பெரிய ஆளாக மாற காரணமாக இருந்த விஜயகாந்தை எட்டி கூட பார்க்கமுடியாமல் இருக்கும் விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுந்துள்ளது.