தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் என்ற யாத்திரை மிகவும் விமர்சையாக தொடங்கி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதி மக்களும் அண்ணாமலையை நேரடியாக சந்திப்பதற்கு களம் இறங்கி வருகிறார்கள். குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்களுடைய குறைகளை அண்ணாமலை அவர்கள் நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையில் அவரை பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக நடைபயண யாத்திரையின் போது கலந்து கொள்கிறார்கள்.
ஒரு பக்கம் நடை பயணம் மக்களின் குறைகள் என்ன என அண்ணாமலை கேட்டாலும் மற்றொரு பக்கம் திமுகவின் உண்மையான முகங்களை மக்களுக்கு காட்டவேண்டும் அவர்களுடைய அரசியலை தமிழக மக்களுக்கு இது தான் என்பதை புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவும் அண்ணாமலை அவர்கள் திமுகவை கடந்த நாட்களாகவே கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
குறிப்பாக திமுகவின் ஒவ்வொரு செயல்களையும் ஆதாரத்துடன் அவர்களுடைய குறைகளை மக்களுக்கு சுட்டிக்காட்டி தற்போது நடப்பது இதுதான் என்பதை வெளிக்கொண்டு வருகிறார். கடந்த வியாழக்கிழமை பாதயாத்திரைக்கு முந்திய நாளில் தான் அண்ணாமலை அவர்கள் டி.எம்.கே பைல்ஸ் பாகம் 2 என்பதை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். குறிப்பாக, அது மட்டும் கிடையாது அவர்களுடைய ஒவ்வொரு செயல்களையும் ஆதாரத்துடன் நிரூபிக்கும் விதமாகவும் பெரிய பெட்டியில் அவற்றை ஆளுநர் அவர்களிடம் அண்ணாமலை அவர்கள் சமர்ப்பித்து இருந்தார்.
இதைப் பார்த்ததுமே ஆளும் திமுக தரப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது திமுக கட்சியை சார்ந்த நபர்கள் அனைவரும் எங்கு நாம் மாட்டிக்கொள்வோமோ என்ற ஒரு அச்சத்தில்தான் தற்போது வரை இருந்து கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் அதற்கு முன்பு அண்ணாமலைக்கு யார் இந்த தகவல்களை கொடுத்திருப்பார்? எப்படி அவர் கையில் ஆதாரத்துடன் தகவல்கள் கிடைத்து இருக்கிறது? என்பது குறித்து திமுக தற்போது யோசிக்க தொடங்கி இருக்கிறது எனவும் அறிவாலய வட்டாரங்கள் குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.
அவர்கள் தரப்பில் இவற்றை அண்ணாமலை யாருடைய துணையும் இல்லாமல் இவற்றை துல்லியமாக தயாரிக்க முடியாது. ஏற்கனவே தமிழகத்தில் இதுவரை இருந்த பாஜக தலைவர்கள் இப்படி செய்யாத ஒன்றை அண்ணாமலை கையில் எடுத்து அதுவும் கச்சிதமாக ஆதாரத்துடன் நிரூபித்து அவற்றை சமர்ப்பிக்க வேண்டிய இடத்தில் சமர்ப்பித்து இருக்கிறார். எனவே இவற்றை யார் நம் பக்கத்தில் இருந்த யாரோ அவருக்கு தகவல் கொடுக்கிறார் என்ற ஒரு யோசனையில் அறிவாலய வட்டாரங்கள் இருந்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றது.
இந்த நிலையில் சில முக்கிய அரசியல் விமர்சகர்கள் இடையில் பேசிய பொழுது அவர்கள் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இது பற்றி அவர்கள் கூறியது என்னவென்றால், திமுகவைப் பற்றி தகவல்களை கொடுப்பதற்கு சில முக்கிய தலைவர்கள் அண்ணாமலையின் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் தான் இவற்றை அண்ணாமலைக்கு கொடுத்து இருக்கலாம் என்ற ஒரு சந்தேகத்தில் அறிவாலய வட்டாரங்கள் இருந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார்கள் .
கடந்த வாரம் மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஒரு தனியார் யு டூப் நிறுவனத்துக்கு பேட்டியளிக்கும்போது கூட திமுகவின் மூன்று முக்கிய தலைவர்கள் கூட பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது. திமுக தரப்பில் இருந்து பாஜகவிற்கு குறிப்பாக அண்ணாமலைக்கு யார் தகவல் கொடுக்கிறார் என்பதே தற்பொழுது அறிவாலயத்தின் முக்கிய பிரச்சினையாக இருந்துவருகிறது.