24 special

தூங்கவே விடமாட்டீங்களா? முதல்வர் ஸ்டாலினை மீண்டும் புலம்ப வைத்த தென் மாவட்ட உடன்பிறப்புகள்

mkstalin,mayor priya
mkstalin,mayor priya

வடமாவட்டங்களில் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக பிரச்சனை எழுந்துள்ள நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் இருந்தும் திமுகவிற்கு தலைவலியை தரும் வகையில் உட்க்கட்சி பிரச்சனை வெடிக்க ஆரமித்துள்ளது.. ஒரு பக்கம் சென்னையில் நடந்த மாமன்ற  கூட்டத்தில் மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இனோவா கார் கேட்டு பிரச்சினை செய்து வருகின்றனர். மறுபக்கம் போராட்டம் என்று கூறி திமுகவினரே திமுக கட்சியில் உள்ள பெண்களிடம் சில்மிஷம் செய்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இது போன்ற பிரச்சினைகள் தற்போது திமுகவில் தலை தூக்கி இருப்பதனால் திமுகவில் ஒற்றுமை குறைந்து உட்கட்சி பூசல்கள் அதிகமாகிவிட்டது என தகவல்கள் கிடைக்கின்றன.... 


திமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் போன்றோர்களால் சில பிரச்சினைகள் உருவாகி தலைமைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது இதன் காரணமாகத்தான் சில நாட்களுக்கு முன்பு திமுகவில் 7 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.தற்போது மற்றொரு சம்பவமாக நெல்லை மாவட்டம் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நெல்லை மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. எப்பொழுதுமே மாமன்ற கூட்டம் என்றால் அதில் கவுன்சிலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் சரவணன் இடையே சிறு வாக்குவாதங்கள் ஏற்படும், ஆனால் இந்தமுறை திமுக கட்சி உறுப்பினர்களே கட்சிக்குள்ளேயே இவ்வாறு அடித்துக்கொள்வது திமுகவிற்கு பேராபத்தை ஏற்படுத்தப் போகிறது என்கிற அளவுக்கு பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் முக்கிய திமுக பிரமுகர்களாக ஆவுடையப்பன், அப்பாவு, அப்துல் வஹாப், மைதீன் கான், மேயர் சரவணன், ஆகியோர் இருந்து வருகின்றனர்.திமுக கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக நெல்லை மாவட்ட அமைச்சராக தங்கம் தென்னரசுவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நியமித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் நெல்லை மாவட்ட மாமன்ற கூட்டத்தில் விதவிதமான பிரச்சனைகள் எடுத்து முன் வைக்கப்படும் நிலையில் தற்போது நடந்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் மகேஸ்வரிக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் என்பவரால் கொலை மிரட்டல் வந்ததாக கூறி மேயர் சரவணனுக்கு எதிராக போராட்டம் செய்தார். திமுக கட்சியில் இருந்து கொண்டே திமுக மேயருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி திமுக தலைமை கோபத்தில் இருந்து வருவதாக தெரிகிறது.

மேலும் இது போன்ற பிரச்சனைகள் வழக்கமாக நடைபெற்று வரும் நிலையில் இதற்கு முன்னால் நெல்லை மாவட்ட கவுன்சிலர்கள் அமைச்சர் நேருவை சந்தித்து  மேயர் சரவணனை மாற்ற கோரி விண்ணப்பம் கொடுத்தும் அதற்கு அமைச்சர் நேரு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாரான பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான பின்னணியை விசாரித்துப் பார்த்தால் மேயர் சரவணனுக்கும் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான வஹாப் என்பவருக்கும் முரண்பாடுகள் இருக்கும் நிலையில் அவர்தான் இவ்வாறான பிரச்சனைகளை கட்சிக்குள்ளே கிளப்பி வருகிறார் என சரவணன் மேயர் சரவணன் தரப்பில் கூறப்படுகிறது.

நெல்லை மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி மாமன்ற கூட்டத்தில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் பாதுகாப்பு இல்லை என்று கூறியது திமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இதன் பின்னணியில் எந்தெந்த கவுன்சிலர்கள் உள்ளனர் என திமுக தரப்பில் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. ஒரு பக்கம் அண்ணாமலை தென்மாவட்டங்களில் நடை பயணத்தை தொடங்கியுள்ள மறுபுறம் தென் மாவட்டங்களில் உள்ள திமுக இதுபோன்ற மோதல்களால் வலுவிழந்து இருப்பது முதலமைச்சரின் மு க ஸ்டாலினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.