24 special

முடிவு செய்த அண்ணாமலை... பாஜக நிர்வாகிகளிடம் சொன்ன அந்த செய்தி!

mk stalin, annamalai
mk stalin, annamalai

2024 ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் தலைமை அனல் பறந்து வருகிறது. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த தேர்தலை நோக்கி முன்னெடுத்த என் மண் என் மக்கள் நடைபயணமும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுவிட்டது என்று பல மூத்த அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பல கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜகவும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் மும்முரமாக இறங்கி உள்ளது. வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மண்டல வாரியாக கூட்டங்களை நடத்த அண்ணாமலை தயாராக உள்ளார். அதன்படி மத்திய சென்னை மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்களுடன் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.


இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அண்ணாமலை, நாடாளுமன்றத் தேர்தலில் யார் வேட்பாளராக இருந்தாலும் நம்முடைய கட்சி வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் நம்மைப் பொறுத்தவரையில் நாம் தான் வேட்பாளர் என்று உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும் அதுவே நாம் அனைவரையும் ஒருங்கிணைக்க வைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அனைவரும் ஒரே குடும்பமாக ஒரே இடத்தில் கூடியதை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்த அண்ணாமலை, நாளையே தேர்தல் நடைபெற்றாலும் கூட களத்தில் தேர்தல் பணியாற்றுபவர்கள் சிட்டுக்குருவியை போல இருக்க வேண்டும், நீங்கள் அனைவரும் மக்கள்  ஒவ்வொருவரையும் நேரடியாக சந்தித்து போஸ்டர்களை சேர்க்க வேண்டும் என்று செயல்வீரர்கள் அனைவருக்கும் தேர்தல் நடவடிக்கைகளை குறித்து விளக்கினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, இந்திய வானிலை ஆய்வு மையம் மழை மற்றும் கனமழைக்கான முன்னறிவிப்புகளை வழங்கியபோதும் மஞ்சள் எச்சரிக்கை எப்படி சிவப்பு எச்சரிக்கையாக மாறியது என்பதையும் படிக்க தெரியவில்லை திமுகவினருக்கு, கமெண்ட் அண்ட் ஜெனரல் ஒரு அறிவிப்பு கொடுத்தாலும் அதை கேட்டு கிரகித்துக் கட்டளைகளை பின்பற்றவும் தெரியவில்லை! சிஸ்டம் முழுவதுமே கெட்டுப் போய் உள்ளது. 

தென் தமிழகத்தில் கனமழை பெய்த பொழுது திருநெல்வேலி மேயர் எங்கிருந்தார்! சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பந்தல் போட்டுக் கொண்டிருந்தார் சரி மேயர் அங்கு இல்லை அப்பொழுது பாதிப்பு நடந்த இடத்திற்கு அமைச்சர் கே என் நேரு மற்றும் துரைமுருகன் சென்று இருக்க வேண்டும் ஆனால் உதயநிதி சென்று பார்வையிடுகிறார். ஏனென்றால் சேலம் இளைஞர் அணி மாநாடு முடிந்த பின்னரே அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பின்பாகவே உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது துணை முதல்வராக்க வேண்டும் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் தான் தற்பொழுது நடைபெற்று வருகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தார். அதுமட்டுமல்லாமல், செயல்வீரர்கள் கூட்டத்தில் எந்தெந்த தொகுதிக்கு யார் வேட்பாளர்கள், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற பல முக்கியமான விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் 25 முதல் முப்பது தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலை இலக்கு நிர்ணயித்து செயல் வீரர்களை தயார் படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக தமிழகத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் திமுக பாஜக மேற்கொண்டு வரும் ஒவ்வொரு தேர்தல் நடவடிக்கைகளும் இடி மேல் இடியாக விளைவதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் திமுக கட்சிக்குள் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே சண்டைகள் நிலவிவரும் நிலையில் பாஜகவின் நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதும் திமுகவிற்கு புகைச்சலை கொடுத்துள்ளது.