அதிமுக பாஜக கூட்டணி கடந்த செப்டம்பர் மாதம் பாஜகவில் இருந்து அதிமுக விலகியது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லி வரும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அதிமுகவில் ஏக்நாத் ஷிண்டேவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இருப்பார் என அரசியல் வட்டாரத்தில் இருந்தது. இதனால் விளக்கம் கொடுத்த வேலுமணி தான் எப்போதும் அதிமுககாரன் என விளக்கம் கொடுத்து வந்தார். தற்போது மீண்டும் அதிமுகவில் பிரச்சனை வெடிக்க தொடங்கியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி முறித்த அதிமுக சிறுபான்மை இன மக்களுக்காக தனது கொள்கையில் இருந்து மாறுபட்டது. உலக நாடுகளே திரும்பி பார்க்கும் விதமாக இந்திய நாட்டில் உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தி கோவில் அமைக்கப்படுள்ளது. வரும் 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதில் அந்த கோவில் கட்டமைப்பு செய்த குழுவினர் அணைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளனர். ஆனால், இந்த விழாவில் காங்கிரஸ் கலந்துகொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கலந்துகொள்ள இரு மனதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திமுக கலந்துகொள்ளும் என தெரியவில்லை ஆனாலும், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்கையில் தனக்கு கால் வலி பிரச்சனை இருப்பதால் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை செல்பவர்கள் செல்லட்டும் என தெரிவித்தார். இதற்கு எங்கு கலந்துகொண்டால் சிறுபான்மையின ஓட்டுகள் கலந்து விடுமோ என்ற பயத்தில் இப்படி பேசுகிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமியிடம் அதிமுக கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு " கரசேவைக்கு செல்ல கட்டளையிட்டவர் ஜெயலலிதா '' எனக் கூறியிருக்கிறார்.
ராமர் கோவில் திருப்பணிக்கு தங்கள் தலைவர் முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார் என்றும் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு தான் தங்கள் நிலைப்பாடு என்றும் மிகத் திட்டவட்டமாக கே.பி.முனுசாமி கூறியிருக்கிறார். ராமர் கோவிலை வைத்து தாங்கள் அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறியபடியே அரசியல் பேசினார் கே.பி.முனுசாமி. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சிறுபான்மை சமுதாய மக்கள் மத்தியில் அதிமுக மீதான பார்வையை வேறு விதமாக மாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. வெண்ணை திரண்டு வரும் வேலையில் பானை உடைத்த கதை போல் அதிமுகவில் குட்டையை குழப்பிவிட்டார் எனவும் பிற கட்சிகளுக்கு சரியான பாயிண்டை எடுத்து கொடுத்துள்ளது முனுசாமி எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும், பழசை எதற்காக இப்போது கிளறுகிறார் முனுசாமி என ஆராய தொடங்கியுள்ளனர். ஒருபக்கம் அதிமுகவில் இருந்து விலகி மாற்று கட்சிக்கு செல்ல திட்டம் போட்டு வருகிறாரா என கேள்வி எழுந்துள்ளது. அப்போ ஏக்நாத் ஷிண்டே கேபி முனுசாமியா என்ற பேச்சும் எழத்தொடங்கியுள்ளது.