24 special

பொங்கலுக்கு நல்ல செய்தியை காத்திருந்து செந்தில் பாலாஜிக்கு இறங்கிய இடி....

senthi balaji, highcourt
senthi balaji, highcourt

கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் இருக்கிறார். இருப்பினும் எப்படியாவது ஜாமினில் வெளிவந்து விட வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி தரப்பு பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது முன்னதாக அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்படும் பொழுது தனக்கு நெஞ்சுவலி என்று கதறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அதற்குப் பிறகு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதும் தமிழக அரசியலில் பரபரப்பானது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சில காலத்திற்கு சிகிச்சைகளைப் பெற்று வந்தார் இருப்பினும் நீதிமன்ற காவல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சைகள் முடிந்த பிறகு புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு மருத்துவ கண்காணிப்பும் வழங்கப்பட்டு வந்தது.


இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவர வேண்டும் என்பதற்காக மனு ஒன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் இந்த ஜாமினில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி ஒரு அமைச்சர் என்பதாலும் அவரது உடல்நிலை கருத்தில் கொண்டும் ஜாமினில் வெளியிடுமாறு கோரிக்கைகளை முன் வைத்தார் இருப்பினும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவந்தால் சாட்சியை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி ஜாமீன் மனு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல் முறையிடும் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக செந்தில் பாலாஜி உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அவர்கள் சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும் பல பரபரப்பு தகவல்கள் வெளிவந்தது. 

மேலும் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் பிரைன் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது இருப்பினும்  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது செந்தில் பாலாஜிக்கு எதிராகவே வந்தது. இதனை அடுத்தும் செந்தில் பாலாஜி தரப்பில் கிழமை நீதிமன்றத்தில் சாதாரண ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இதன் விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பொங்கல் விடுமுறையில் எப்படியாவது வீட்டிற்கு திரும்பி விடலாம் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் சில நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபடலாம் நமக்கு சாதகமான மற்றும் நமக்கு தேவையான ஆட்களை எம் பி வேட்பாளராக தேர்ந்தெடுக்கலாம் என்று திட்டம் தீட்டியிருந்தார் செந்தில் பாலாஜி, மேலும் இதற்காகவே டெல்லிக்கு முக்கிய இடத்தில் தூது அனுப்பி காத்திருந்ததாகவும் அரசியல் விமர்சிகர்கள் கூறி வந்தனர். ஆனால் இந்த நிலையில் கரூரில் அமைத்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வருகின்ற பங்களா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை இட்டுள்ளனர். மேலும் பங்களா கட்டிடத்தையும் அளவு எடுத்து சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல்  தெரிந்த செந்தில் பாலாஜி அதிர்ச்சியில் உள்ளதாக சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வரும் பொங்கல் பண்டிகை முடிந்து முதல்வரிடம் சென்று முறையிட செந்தில்பாலாஜி மனைவி தரப்பினர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.