தமிழகம் வந்திருந்த பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை குறித்தும் தமிழக பாஜக குறித்தும் விமர்சனம் செய்ததற்கு அண்ணாமலை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இன்று சொல்கிறேன் நான் வாழ் நாள் முழுவதும் சுப்ரமணிய சாமியை பார்க்க போவது இல்லை என நேரடியாக அண்ணாமலை தெரிவித்து இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணிய சாமியிடம் செய்தியாளர் ஒருவர், அண்ணாமலையை தமிழகத்தின் சிங்கம் என்று சொல்கிறார்கள். அவரது எழுச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சுப்பிரமணிய சுவாமி, அண்ணாமலை யாரு என்று கேள்வி எழுப்பினார், அவர் தமிழகத்தில் பாஜக தலைவர் என்று செய்தியாளர்கள் சொல்ல, தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? என்று எதிர்கேள்வி எழுப்பினார். மேலும், மேலும் கேள்வி கேட்க, தமிழகத்தில் பாஜகவை நான் பார்த்ததில்லை. பின்னர் அவரை எப்படி பார்க்க முடியும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
சுப்ரமணிய சாமியின் இந்த பதிலை திமுக மற்றும் பாஜக எதிப்பாளர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அண்ணாமலையை கிண்டல் செய்து வந்தனர், இந்நிலையில் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்ப பட்டது.
அப்போது எங்களுக்கு யாரும் அறிவுரை வழங்க வேண்டாம் இங்க சிலருக்கு நாங்கள் தான் என்ற நினைப்பு இருக்கிறது அது பழைய இந்தியா இது புதிய இந்தியா நான் சொல்றேன் வாழ் நாள் முழுவதும் நான் சுப்ரமணிய சாமியை சந்திக்கவே போவது இல்லை என நேரடியாக பதிலடி கொடுத்தார்.