24 special

உதயநிதியை எதிர்த்து கேள்வி கேட்ட எம். பி செந்தில்குமார்க்கு ஏற்பட்ட நிலை....!

Udhayanidhi,mp senthil kumar
Udhayanidhi,mp senthil kumar

2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தருமபுரி எம்பி ஆக உள்ள செந்தில்குமார் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருப்பவர். சமூக நீதி மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கேதிராக கேள்வி எழுப்பி வருபவர்! அதோடு அவர் யாரிடமாவது திடீரென்று கேள்வி எழுப்பி சர்ச்சையில் மாட்டிக் கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினிடம் செந்தில்குமார் கேள்வி எழுப்பியது மற்ற கட்சியினரை மட்டுமின்றி திமுகவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகவும் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் ஆகவும் இருந்து வருகிறார், தற்போதும் அந்த பதவியில் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை புதிதாக நியமித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த வருடம் டிசம்பர் 12ஆம் தேதியிலிருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது தேர்வு வைக்கப்பட்டு பிறகு நேர்காணல் மற்றும் இதுவரை அவர்கள் மேற்கொண்ட கள பணிகளின் அடிப்படையில் இந்த பொறுப்புகளுக்கு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய நிர்வாகிகளில் நியமனம் செய்த பொழுது குறிப்பிட்டார். 

மேலும் இந்த பொறுப்புகளுக்காக 72 கழக மாநிலங்களில் இருந்து 4158 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகவும் அதில் 609 பேர் தேர்வாகி இளைஞர் அணி பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது நேர்காணலில் அனைவரும் திறமையானவர்கள் யாரை தேர்ந்தெடுப்பது போன்ற குழப்பங்கள் இருந்ததாகவும் அதனாலயே இவ்வளவு நீண்ட நாட்கள் நேர்காணல் நடைபெற்றதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து கூறப்பட்டது. மேலும் இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட-மாநகர அமைப்பாளர்/துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியரின் கொள்கை வழியில் பயணித்து நம் கழகத் தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து உழைப்போம் என்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருதார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 

ஆனால் இந்த நியமனத்தில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நியமனத்தில் எம்பி செந்தில்குமாருக்கு உடன்பாடில்லை என்று தெரிகிறது. அதனால் தனது டிவிட்டர் பக்கத்தில், இளைஞர் அணி பொறுத்தவரை நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்புபவன். தர்மபுரி மாவட்ட அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட  தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது போல் நடந்துவிடகுடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை என்று அமைச்சர் உதயநிதியிடமே கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி ட்விட்டரில் முதல்வரின் மகன் மற்றும் துணை முதல்வர் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர் உதயநிதியிடமே கேள்வி எழுப்பியதற்கு தர்மபுரி எம்பி செந்தில்குமாருக்கு ஒரு பக்கம் பாராட்டும் குவிந்து வருகிறது ஆனால் மறுபக்கம் விமர்சனங்களையும் அவர் சந்தித்து வருகிறார். 

அதாவது கட்சியின் உச்சத்தில் இருக்கும் ஒருவரை அக்கட்சியை சேர்ந்த ஒருவரே கேள்வி எழுப்பி உள்ளார் என்றும், ஏன் இப்படி ஒரு கேள்வி எழுப்புகிறார் இவரது விளம்பர ஆசைக்கு ஒரு அளவே இல்லையா என்ற கலவையான விமர்சனங்கள் செந்தில்குமார் மீது குவிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அரசியல் விமர்சகர்கள் இதற்க்கு பின்னணியில் வேறு காரணத்தை கூறுகின்றனர், அதாவது வரும் 2024 நடாளுமன்ற தேர்தலில் தருமபுரி எம்.பி செந்தில்குமார்க்கு சீட்டு கொடுக்க திமுகவின் அதிகார மையமான உதயநிதி விரும்பவில்லையாம், இதன் காரணமாகவே தருமபுரி எம்.பி செந்தில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓரம்கட்டி வருவதாகவும் இது தெரிந்தே செந்தில்குமார் கொதிப்பதாகவும் அறிவாலய வட்டாரங்களில் கூறுகிறார்கள்!