24 special

மோடி வந்து விட்டுப் போன மாலையே அஸ்திரத்தை கையில் எடுத்த அண்ணாமலை.....

annamalai, pm modi
annamalai, pm modi

பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைப்பதற்காக தமிழகத்திற்கு வந்திருந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் இருவரும் சேர்ந்து வரவேற்றனர். மேலும் இவர்களுடன் அமைச்சர்களான கே என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரும் பிரதமரை வரவேற்றனர். இதற்குப் பிறகு திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரதமர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள முப்பத்தி எட்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். முன்னதாக பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரவேற்பு உரையை வழங்கும் பொழுது கூடி இருந்த பார்வையாளர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து மோடி மோடி என்று கூச்சலிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.


இதனை அடுத்து ரூபாய் 1,112 கொடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் 20,140 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களில் நிறைவு பணிகளை எட்டி உள்ள பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இது மட்டுமின்றி, சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப் பிரிவில், 41.4 கி.மீ, இரட்டை ரயில்பாதைத் திட்டம், மதுரை - தூத்துக்குடி இடையே 160 கி.மீ தூரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம், திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கல், விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல், செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய திட்டங்களும்  தொடங்கி வைத்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை 332ஏ-வில் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிமீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பது மற்றும் காமராஜர் துறைமுகத்தின் இரண்டு பொது சரக்குக் கப்பல் தங்குமிடத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இப்படி 2024 ஆம் ஆண்டு பிறந்த இரண்டாவது நாளிலே தமிழகத்திற்கு வந்து தமிழகத்தின் கிட்டத்தட்ட ரூபாய் 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதனால் நேற்று தமிழக முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தது, அனைத்து திட்டங்களையும் தொடங்கி வைத்த பின்பு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்பிய உடனே தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து கூட்டம் போட்டு உள்ளார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திருச்சியில் தமிழக பாஜக ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்க பட்ட பொழுது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் பிரதமர் நரேந்திர மோடி அண்ணாமலையிடம் சில முக்கிய டாஸ்க்களை கொடுத்துள்ளதாகவும் அதை குறித்து வைத்துக்கொண்டு அண்ணாமலை தனது நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து எடுத்துரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.