24 special

கெத்தாக சுற்றிய தயாநிதி மாறன் எம்.பிக்கு ஏற்பட்ட கதி....

dhayanithi, india kootani
dhayanithi, india kootani

கடந்த சில நாட்களாக திமுக எம்பி தயாநிதிமாறன் முன்பு பேசிய வீடியோக்கள் பெரும் வைரலானது. அந்த வீடியோவில் திமுக எம்பி தயாநிதி மாறன், ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐடி நிறுவனங்களிலும் நல்ல சம்பாத்தியத்திலும் வேலை பார்க்கிறார்கள் ஆனால் இங்கு இருக்கும் சிலரோ இந்தி இந்தி என்று கூறுகின்றனர் அப்படி பீகார், உத்திர பிரதேசம் போன்ற வட மாநிலத்தில் இந்தி மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டில் கட்டடங்கள் காட்டவும் கழிவறை சுத்தம் செய்வதற்குமே பணியமர்த்தபடுகின்றனர், இந்தி மட்டும் கற்றுக் கொண்டிருந்தால் இதுதான் நிலைமை என்று தெரிவித்திருந்தார். 'இந்த வீடியோ முன்பு தயாநிதி மாறன் கூறியதாக இருந்தாலும் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை அடுத்து பல கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது.


முதலில் பிஹார் துணை முதல்வரும் ராஸ்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், எந்த கட்சித் தலைவராக இருந்தாலும் சரி இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் இந்தியா ஒரு நாடு, இதனால் ஒவ்வொரு மாநிலத்தின் உள்ள மக்களையும் மதிக்க வேண்டும் என்று தெரிவித்து திமுக எம்பி தயாநிதிமாறனின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இவரைப் போன்றே மத்திய அமைச்சரும் பீகார் பாஜக தலைவருமான கிரிராஜ் சிங்கும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஏற்கனவே தமிழக முதல்வரின் மகனும் திமுக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை வேரோடு அறுக்க வேண்டும் ஒழித்தே ஆக வேண்டும் என்பதை குறியாக கொண்டு சனாதனத்தை எதிர்த்ததற்கு வட இந்தியா முழுவதும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் குவிந்தது.

அதுமட்டுமின்றி INDI கூட்டணியில் இருந்தும் உதயநிதியின் சனாதான பேச்சுக்கு எதிர்ப்புகள் வந்தது இதனால் ஐந்து மாநிலங்களின் தேர்தலிலும் காங்கிரஸ் கடும் தோல்வியை சந்தித்தது INDI கூட்டணியில் பெரும் பரபரப்பானது. அமைச்சர் உதயநிதியை தொடர்ந்தே, திமுக எம்பி செந்தில்குமார் ஹிந்தி பேசும் மாநிலங்களை கோமூத்ரா மாநிலங்கள் என்று நாங்கள் கூறுவோம் என மக்களவையில் அவர் பேசியிருந்ததும் பெரும் சர்ச்சையானது. அதற்குப் பின்பு அவர் தான் தேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டிருந்தார். இப்படி தொடர்ந்து திமுக அமைச்சர்கள் இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் பல விமர்சன கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு இந்தியா முழுவதும் பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனால் INDI கூட்டணியில் திமுகவிற்கு பலத்த எதிர்ப்புகள் நிலவி வந்தது.

 இந்த நிலையில் தயாநிதி மாறனின் கருத்துக்களும் INDI கூட்டணியின் முக்கிய தலைவர்களை முகம் சுளிக்க வைக்க இனி திமுகவிற்கு INDI கூட்டணியில் இடம் கொடுக்கக் கூடாது எப்படியாவது அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற முனைப்பில் காரசார ஆலோசனைகள் INDI கூட்டணி கட்சிகள் இடையே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி தன் கட்சி நிர்வாகிகளாலே INDI கூட்டணியிலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் திமுக விரட்டி அடிக்க வரலாம் என்ற ஒரு நிலையை திமுக சந்தித்தது. இந்த நிலையில் தயாநிதி மாறன் தற்போது தன் கருத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். மேலும் நான் பேசுகின்ற பேச்சை வெட்டியும், ஓட்டியும், திரித்தும், மறைத்தும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது என விளக்கத்தையும் கொடுத்துள்ளார். இதன் பின்னணியை விசாரித்த பொழுது அறிவாலயத்திலிருந்து தயாநிதி மாறனை அழைத்து கண்டித்ததோடு இனிமேல் சீட்டு கிடையாது வெளியே போ என்கிற ரீதியில் கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.