தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று அக்கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ,திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை ,பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க போராட்டம் நடத்துகிறார்கள் ஆனால் GST குள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் , இதுதான் திமுகவின் இரட்டை வேடம் என சுட்டிக்காட்டினார் .
மேலும் தமிழக நிதியமைச்சர் சட்டத்திற்கு புறம்பாக பெண்கள் உட்பட பலரை தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார் , அரசியல்வாதியாக அவர் என்னவேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும் ,ஆனால் அமைச்சராக பொறுப்பை உணர்ந்து பேசவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார் , இந்நிலையில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு உரிய முறையில் பதில் அளித்தார் அண்ணாமலை .
பேட்டியின் இறுதியாக பெண் நிருபர் ஒருவர் மே 17 ,இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தி தங்களை அரசியல் தலைவர் இல்லை என்கிறாரே ? மேகதாது விவகாரத்தில் போராட்டம் நடத்திய அண்ணாமலை தற்போது கர்நாடக சென்று போராட்டம் நடத்துவாரா ? என திருமுருகன் காந்தி உங்களை கேள்வியெழுப்பியுள்ளார் என்ற கேள்வியை நிருபர் கேட்டார் ,இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது மட்டுமல்லாமல் கேள்வி எழுப்பிய நிருபரும் அமைதியாகிவிட்டார் .
இந்த மாசம் ,நாள் பெயரில் கட்சி வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்க தேவையில்லை , நாங்கள் இந்தியாவின் ஆளும் கட்சி 18 கோடி உறுப்பினர்களை கொண்டுள்ளோம் , பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளோம் எனவே லெட்டர் பேட் வைத்துள்ளவர்கள் , மாச பெயரில் அமைப்பு வைத்துள்ளவர்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை என சிரித்தபடி தெரிவித்தார் ,அண்ணாமலையை நோஸ்கட் செய்யவேண்டும் என கேள்விகேட்ட நிருபர் அதன் பிறகு பதில் கேள்வி கேட்கவில்லை .
திருமுருகன் காந்தி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என வாய்கிழிய பேசிய திருமுருகன் காந்தியின் மானத்தை ஒரே வார்த்தையில் கப்பலேற்றிவிட்டார் . வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது .