24 special

அண்ணாமலை கொடுத்த ஷாக்! அலறி அடித்து ஓடிய சிவி சண்முகம்!

annamalai, cv sanmugam
annamalai, cv sanmugam

நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் கூட்டணி அமைப்பதில் மும்மூரமாக இருந்து வருகிறது. ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது ஆனால் தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகள் இன்னும் தனது கூட்டணியை அறிவிக்காமல் உள்ளது. அதன்படி தமிழகத்தின் ஆளும் கட்சியாக உள்ள திமுக கூட்டணி குறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தையை தற்பொழுது முடித்துள்ளது இதனை அடுத்து அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முதல்வர் மு க ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு திரும்பிய பிறகே மேற்கொள்ளப்படும் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு பாஜக, அதிமுக கட்சிகளும் தற்போது கூட்டணியில் இல்லாததால் இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணியை பெருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அதிலும் குறிப்பாக பாஜகவின் செல்வாக்கு மற்றும் வாக்கு வங்கி அனைத்தும் தற்போது தமிழகத்தில் உயர்ந்திருப்பதாலும் அதிமுகவே இந்த சூழலில் தனது கூட்டணியை வலுப்படுத்திக் கொள்ளும் கட்டாயத்தில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


முன்னதாக பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் அதிமுக மற்றும் திமுக தனித்து விடப்பட்டுள்ளது திமுகவும் இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை அதிமுகவும் அதே போன்று கூட்டணி குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை ஆனால் பாமக பாஜக பக்கம் திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி அதிமுக தனது பெரும்பான்மையான செல்வாக்கை கொண்டிருந்த முக்குலத்தோர் சமுதாயத்திலும் தற்போது எடப்பாடிக்கு எதிரான சூழல் நிலவி வருவதால் அந்த சமுதாயத்தின் ஓட்டுகளும் அதிமுகவிற்கு வில வாய்ப்பில்லை அவை அனைத்தும் பாஜகவிற்கு சாதகமாக திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பாஜக தனது செல்வாக்கைப் பெருக்கியதோடு மட்டுமின்றி தனது கூட்டணியை வலுப்படுத்திக் கொள்வதற்காக பல முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் பாமக  இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளதும் பாஜகவின் கூட்டணியை நாமே முறித்துக் கொண்டோம் பிறகு நாமே தேர்தலுக்காக கூட்டணி அமைக்க வேண்டிய நிலையில் உள்ளோம் எனவே நம் கையில் தற்போது இருக்கும் ஒரே கட்சி பாமக மட்டுமே அதனால் பாமக நிறுவனரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபடலாம் என்ற ஒரு முடிவுக்கு அதிமுக தலைமை வந்ததாகவும் அதனை தொடர்ந்து அதிமுகவின் சார்பில் சி வி சண்முகம் பாமகவின் நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து பேசி உள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இன்னும் நாம் தாமதப்படுத்திக் கொண்டே சென்றார் தேர்தலில் நம்மால் எதிர்கொள்ளவே முடியாது அதனால் உடனடியாக செல்ல வேண்டும் என்ற ஒரு பரபரப்புடன் சி வி சண்முகம் ராமதாஸின் இல்லத்திற்கு சென்று சந்தித்ததாகவும் கூட்டணி குறித்தும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு கொடுத்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இருப்பினும் இரு தரப்பினர் மத்தியிலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக மட்டுமே தவிர கூட்டணி சம்பந்தமாக அல்ல என்றும் கூறப்படுகிறது. அதோடு அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு வந்ததும், திமுகவின் கூட்டணி கட்சிகள் அதிமுக பக்கம் செல்ல பேச்சுவார்த்தை நடப்பதும், அதிமுக கண்டிப்பாக கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டதும், அதற்காக தமிழகத்தின் மற்ற கட்சிகளின் தலைவர்கள் வீடுகளுக்கு ஏறி இறங்குவதும் அண்ணாமலையின் அரசியல் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபட்டுள்ளது. அன்றே அண்ணாமலை கணித்து அதிமுகவை வெளியே அனுப்பியது மாஸ்டர் ஸ்ட்ரோக் என கூறப்படுகிறது....