இரு பிரபலங்கள் திருமண வாழ்க்கையை தொடங்கிய பிறகு சிலரே அதனை தக்க வைத்து பல வருடங்களாக திருமண பயணத்தை கொண்டு செல்கின்றனர், ஆனால் சிலர் கருத்து வேறுபாட்டால் சில மாதம் அல்லது வருடங்களிலே பிரிந்து விடுகின்றனர். முதலில் தினேஷ் தாயார் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரட்சிதா எங்களுக்கு மருமகள் அல்ல மகள் போன்றவள் என்ன காரணத்திற்காக இருவரும் பிரிந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் ரட்சிதா மீண்டும் எங்களிடம் வரவேண்டும் என்று கண்ணீர் மல்க பேசி இருந்த வீடியோ வைரலானது. அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டிருந்தார் தினேஷ் ஒரு டாஸ்க் ரட்சித்தா குறித்தும் தனது திருமண வாழ்க்கை எப்படி இந்த ஒரு நிலையை அடைந்தது என்பது குறித்தும் வேதனையுடன் பேசி இருந்தார் ஏதேனும் அவர் ரட்சித்தவுடன் மீண்டும் இணையும் விருப்பத்தில் இருக்கும் வகையிலான கருத்துக்களை பேசியிருந்தார். அதுவும் சமூக வலைதளம் மட்டுமின்றி பொது மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறியது.
இப்படி ரசித்தவுடன் இணையும் வகையில் தினேஷ் ஒவ்வொரு இடத்திலும் தனது கருத்தை பதிவிட்டு வரும் நிலையில் ரட்சிதா பல இடங்களில் பல கருத்துக்களை மற்றும் பல பதிவுகள் மூலம் தினேஷுடன் சேர்ந்து வாழும் விருப்பம் இல்லாததையே தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல தனியா தொலைக்காட்சியில் நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் விவாகரத்து பெற்ற பெண்களை இந்த சமுதாயம் எப்படி பார்க்கிறது என்று தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விவாகரத்து பெற்ற பெண்கள் அணியில் சந்திர பிரபா என்கிற டாக்டர் ஒருவர் கலந்து கொண்டு விவாகரத்து பெற்ற பிறகு தன்னுடைய நிலைமை எப்படி இருந்தது பெண்கள் எப்படி சுயமாக முன்னேற வேண்டும் இந்த சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது என்னென்ன என்பது பற்றி அவர் பேசியிருந்தது அனைத்தும் சமூக வலைதளத்தில் அதிக பாராட்டுகளை பெற்றது. இந்த நிலையில் ஏற்கனவே பேசுபொருளில் சிக்கி உள்ள ரட்சிதா இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சந்தர பிரபாவை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தோடு உறவு என்று தலைப்பிட்டு ஒரு சிலர் எப்படித்தான் கனெக்ட் ஆகுறோம்னு தெரியல ஆனா இது நிச்சயமாக பிரபஞ்சத்தின் அழைப்பு.....சில சமயங்களில் உங்களுக்கு தேவையானது கேட்க ஒரு ஆன்மா மற்றும் சிந்திக்க ஒரு மனது தேவைப்படும்..... தன்னம்பிக்கை , "தி வொண்டர் வுமன்" பேராசிரியர் "டாக்டர் சந்திரபிரபா" மேடம் உங்களை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ....சுற்றிலும் காயப்பட்ட பல உயிர்களைத் தொட்டுள்ளீர்கள்...... உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. ... எனக்கு மிகவும் தேவையாக இருந்த ஒரு குணப்படுத்தும் ஆராவை நீ தந்தாய்.... இன்னொரு நாளை எதிர்கொள்ள ஒரு புதிய பார்வையை தந்தாய்...... என்னுள் இழந்த நம்பிக்கையை நிரப்பியது.... நீங்கள் உண்மையிலேயே ஒரு உத்வேகம்.... நிறைய குணமடையாத ஆன்மாக்களுக்கு ஜோதியை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.... ஒரு உண்மையான ஜோதி ஏந்தியவர், நமது சமூகத்தின் மங்கலான பார்வையைத் துடைக்க இங்கே நீங்கள் இருக்கிறீர்கள். .... உங்கள் எண்ணங்கள், சித்தாந்தம் மற்றும் அறிவுத் தொகுப்புக்கு ஒரு பெரிய பெரிய வரவேற்பு... பழமையான நம்பிக்கைகள் கொண்ட இந்த சமூகத்திற்கும் மக்களுக்கும் இன்னும் நிறைய தேவை தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டே இருங்கள் அம்மா என்று பதிவிட்டதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.. சிலர் ரட்சிதாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர் இருப்பினும் சிலர் தினேஷை வெறுப்பேற்றுவதற்காக தான் இப்படி நீண்ட பதிவை இட்டு உள்ளீர்களா என்றும் விமர்சித்து வருகின்றனர்..