24 special

உத்தரகாண்ட் அடித்த அடி அலறிய திருமாவளவன்!

thirumavalavan
thirumavalavan

அனைத்து மதத்தினரையும் பொதுவாக ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவரும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளில் பாஜக கடந்த தேர்தலில் தமது வாக்குறுதிகளில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதையும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இதற்கு பல பகுதிகளில் இருந்து எதிர்ப்புகளும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் நிலவி வருகிறது. அப்படி இந்த பொது சிவில் சட்டம் என்ன சொல்ல வருகிறது என்றால் நமது நாட்டில் இந்த சமயம் மற்றும் பிற சமயத்தை சேர்ந்தவர்களுக்கு திருமணம், குழந்தை தத்தெடுப்பு, வாரிசுரிமை, விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்கு தனித்தனியான சட்டங்கள் அவை அனைத்தையும் மாற்றியமைத்து நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. ஆனால் நாட்டின் எந்த பகுதியிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படவில்லையா? என்றால் கிடையாது! 1867 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்கள் கோவாவை கைப்பற்றி ஆட்சி செய்த பொழுது இந்த சட்டம் அங்கு கொண்டுவரப்பட்டது அதற்குப் பிறகு 1961ல் தான் இந்தியாவில் ஒரு மாநிலமாக கோவா இணைந்தது அங்கு இந்த பொது சிவில் சட்டம் இன்று வரை பின்பற்றப்படுகிறது அதோடு எந்த பிரச்சனையும் அங்கு எழவில்லை.


இந்த அறிவிப்பையே பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்து வந்தது அதன்படி தற்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தில் இதற்கான முதல் முயற்சியை அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு தேர்தலில் உத்தரகாண்டில் பாஜக அரசு வெற்றியை பெற்ற பிறகு இதற்கான முயற்சிகளை எடுக்க தொடங்கியது, அதன்படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அந்த குழுவும் மாநில அரசிடம் 479 பக்கங்கள் கொண்ட வரைவை அறிக்கையாக சமர்ப்பித்தது. இதனை அடுத்து உத்தரகாண்டின் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றால் சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகான்ட் திகழும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்றவற்றிற்கு ஒரே சட்டத்தை விளக்குவதாகவும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து ஜாதி மதத்தினருக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்படுகிறது மேலும் லிவ் இன் உறவுகளுக்கும் இந்த மசோதா விதிகளை வரையறுத்துள்ளது.

இருப்பினும் உத்தரகாண்டில் ஒரு பொது சிவில் சட்டம் குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது இடதுசாரிகள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது, அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆடிப் போய் உள்ளனர். ஏனென்றால் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மிகப்பெரிய பிரச்சினையாக நீடித்திருந்த அயோத்தி ராமர் கோவில் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது என அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் பாஜக ஆட்சி நிகழ்த்தி வரும் நிலையில் உத்தரகாண்டிலும் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சி தரப்பையும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது. அதேபோன்று தமிழகத்தின் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தது, சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அனைத்து விதமான உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட அந்த கட்சி அதே போன்ற ஒரு நோக்கத்தை கொண்ட சட்டம் வருவதை எதிர்த்து வந்தது வேடிக்கையானது தான்! அப்படி இருக்கும் பொழுது உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது விசிக தலைவரான திருமாவளவனை வெட வெடக்க வைத்துள்ளது என்று தகவல்கள் கசிகின்றன.