24 special

முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாக சவால் விடுத்த அண்ணாமலை....!திணறும் ஆளும் கட்சி...!

Stalin and annamalai
Stalin and annamalai

வரும் 11 ஆம் தேதி எப்படி முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைக்கும் கூட்டத்திற்கு செல்வார் என பாப்போம்... அப்படி சென்றால் எப்படி மீண்டும் தமிழகம் வருவார் என கேள்வி எழுப்பி பகிரங்க பாயிண்டை பிடிச்சு பேசி  இருக்கிறார் அண்ணாமலை. 


கடந்த 9 ஆண்டு கால பாஜகவின் ஆட்சியில் உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதனை பற சாற்றும் விதமாக இன்று நம்பர் ஒன் தலைவராக உருவெடுத்து உள்ள பிரதமர் ஒரு பக்கம்... அதே வேளையில்... உலக அரங்கில்  இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பை  தக்க வைக்க ,.. உள்நாட்டில்  மேலும் வலுப்படுத்த பாஜக  மிக தீவிரமாக  இறங்கியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா  சென்று திரும்பிய பிரதமர் பற்றி இந்தியா முழுக்க பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த அதே நேரத்தில்..... பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் களத்தில்  இறங்கிய எதிர்க்கட்சிகளின் மாநாடு பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் பற்றிய பாசிட்டிவான பேச்சை விட.... ஆம் ஆத்மீ  - காங்கிரஸ் இடையேயான பனிப்போரை தான் வெளி கொண்டு வந்தது.

இதற்கு அடுத்தபடியான... இரண்டாவது கூட்டம் ஹிமாச்சல் பிரதேசம் ஷிமோகாவில் நடைபெறும் என சொல்லி இருந்த தருணத்தில் திடீரென கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடக்கும் என அறிவித்தது... இப்படியான சமயத்தில் தான்... எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல் பிரச்சனை ஆம்  ஆத்மீ ... இரண்டாவது  பிரச்சனை ...சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் பிளவு.... இப்ப அடுத்ததாக.. கர்நாடக மாநில  துணை முதல்வர் டி.கே  சிவகுமார், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என சொல்லி இருப்பது தமிழக மக்களை கொந்தளிக்க வெச்சு இருக்கு.

இப்படியான நிலையில்... தன்னுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் இப்படி ஒரு வேலையை செய்கிறதே... இந்த நிலையில் பெங்களூருவில் வரும் 11 ஆம் தேதி நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டால்.... முதல்வர் ஸ்டாலின் காவிரி தண்ணீர் பிரச்சனை பற்றி காங்கிரசுக்கு எதிராக பேச வேண்டி இருக்கும்... அப்படி பேசாமல் விட்டுவிட்டால், திமுகவை எதிர்க்கும் பாஜகவிற்கு மிக பெரிய பாயிண்டை எடுத்துக்கொடுத்து விட்டதாக ஆகிவிடும்.

இப்படியான நிலையில் தான் நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய  அண்ணாமலை....வரும் 11 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். இல்லை என்றால் விட மாட்டோம் என நேரடியாகவே முதல்வருக்கு சவால் விடுத்து உள்ளார். இதை எல்லாம் பார்க்கும் மக்களும் அண்ணாமலை கேட்பது சரிதானே.. தமிழக மக்களுக்காக கூட்டணி கட்சியிடம் கேள்வி கேட்காமல் இருக்கலாமா? என பேச தொடங்விட்டனர்.