24 special

மோடியின் அறிவிப்பால் ஆடிப்போன திமுக...!இனி மத அரசியல் எடுபடாது...!

Modi, stalin
Modi, stalin

மத்தியப் பிரதேசம் போபாலில் செவ்வாய் அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோதி, இந்தியாவில், வெவ்வேறு சமூகங்களில் அவர்களின் மதம், நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் தனித்தனியான சட்டங்கள் உள்ளன.


ஆனால் பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டால், நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் சாதி, மதம், பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான சட்டம் பின்பற்றப்படும்.

நாடு முழுவதும் இது போல் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இயற்றப்படுவது அவசியம் எனப் பேசிய பிரதமர், 'ஒரே குடும்பத்தில் உள்ள இருவருக்கு தனித்தனியான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் அந்த குடும்பம் எப்படி இயங்க முடியும்` எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோதி, "பொது சிவில் சட்டம் இயற்றப்படவேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. அந்த சட்டம் தேவை என்ற ஒற்றை இலக்கிலேயே உச்ச நீதிமன்றம் எப்போதும் கருத்துக்களை முன்வைத்து வருகிறது. இருப்பினும், வாக்கு வங்கி அரசியல் பசியில் உள்ளவர்கள் அதற்குத் தடையாக இருக்கிறார்கள். ஆனால் பாஜக எப்போதும் எல்லோருடனும், எல்லோருக்காகவும் என்பதை கடைபிடித்து வருகிறது," என்றார்.

மேலும் பேசிய அவர், "முத்தலாக்கை ஆதரித்து வாதிடுபவர்கள் வாக்கு வங்கி அரசியல் பசியால் இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு நாடு முழுவதும் அநீதி இழைக்கிறார்கள். முத்தலாக் என்பது பெண்களை மட்டுமே பாதிக்கிறது என நாம் கருத முடியாது. மாறாக அது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வாழ விரும்பும் பெண் ஒருவர் முத்தலாக் மூலம் எளிதில் வீட்டை விட்டு விரட்டப்படுகிறார். இது அந்த பெண்ணுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது,'' என்றார்.

"சிலர் இஸ்லாமிய மகள்களின் தலைக்கு மேல் 'முத்தலாக்' என்ற தூக்குக் கயிற்றைத் தொங்கவிட விரும்புகிறார்கள். இது இஸ்லாமிய பெண்கள் தொடர்ந்து சுரண்டப்படுவதற்கு கிடைக்கும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது." என்ரார் பிரதமர் மோடி 

இதற்கு திமுக போன்ற கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அதன் அடிப்படையிலான விதிகளுக்கு மாறாக வேறொன்றை பின்பற்ற நிர்பந்திருப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? என்னுடைய மதம் எது என்று தீர்மானிக்க அரசு யார்? என்று எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

"நாங்கள் இந்திய அரசியல் சாசனத்தால் ஆளப்படுகிறோம், என்னுடைய மதத்தை பின்பற்ற அரசியல் சாசனம் முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளது" என்று எதிர்க்கட்சிகள்  வாதிடுகின்றனர்

இந்த நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு நடந்தது. 

 பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை  பேசியதாவது:- ஈரோட்டில் இருந்து அரசியல் மாற்றம் தொடங்குகிறது. இந்தியாவில் 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடியால் ஒவ்வொரு திட்டங்கள் வழியாகவும் தொடப்பட்ட மக்கள் இந்த கூட்டத்துக்கு வந்து இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த போது இந்தியாவில் மக்களிடம் சமநிலை இல்லை. வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என்று அனைத்திலும் வேறுபாடு இருந்தது. அப்போது உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் 11-வது நாடாக இருந்தது. 2022-ல் அது 5-வது இடத்துக்கு மாறி இருக்கிறது.

9 ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் இப்படிப்பட்ட வளர்ச்சியை பெற்றதில்லை. இன்னும் 3 ஆண்டுகளில் ஜப்பான், ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்துக்கு வந்து விடும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவை பெருமிதத்துடன் பார்க்கிறார்கள். லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு மத்திய ஆட்சியை கொடுக்க முடியும் என்று பிரதமர் 9 ஆண்டுகள் ஆட்சி செய்து காட்டி இருக்கிறார்.

வருகிற 2024-ம் ஆண்டு 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி.க்கள் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். 2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவின் சிந்தாந்தம் வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இன்று வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாங்கள் நாட்டை விட்டு எத்தனை தொலைவில் இருந்தாலும் இந்தியன் என்பதை பெருமையாக உணர்கிறோம் என்று கூறுகிறார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் அனைவரும் தற்போது இரட்டை குடியுரிமை இந்தியாவில் கிடைக்குமா? என்று கேட்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். உலக நாடுகளும் மோடியை விலைக்கு வாங்க முடியாது என்று புரிந்து கொண்டார்கள். எனவே தான் வல்லரசு நாடுகளும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை செலுத்துகிறார்கள். மிக நேர்மையான ஆட்சியை மோடி நடத்தி வருகிறார்.

முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது மக்களிடம் சமநிலை வரவேண்டும் என்று முதலில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு 886 நாட்களில் மின்சார இணைப்பு வழங்கினார். இப்போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவேன் என்கிறார். கண்டிப்பாக பிரதமர் மோடி  கொண்டு வருவார். 1956-ம் ஆண்டிலேயே இந்துக்கள் பொது சிவில் சட்டத்துக்குள் வந்து விட்டோம். இந்து மதத்தில் ஒவ்வொரு பிரிவுக்கு ஒவ்வொரு கலாசாரம் இருந்தாலும் இந்து சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்படுகிறோம். அதுபோல் அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் பொது சிவில் சட்டம். இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். அதனால் போடு சிவில் சட்டம் குறித்து அம்பேத்கார் பேசிய நாடாளுமன்ற உரையை  1லட்சம் நகல் எடுத்து எதிர்ப்பவர்களுக்கு அனுப்புவதாக இருக்கிறோம் என்றார் அண்ணாமலை 

 ஒரு முதல்-அமைச்சராக இருக்க தகுதி இல்லாதவராக அவர் உள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் பேசிய உரையை தமிழில் மொழி பெயர்த்து முதல்-அமைச்சருக்கு ஒரு லட்சம் பிரதிகள் அனுப்புவோம். நாங்கள் இங்கே கீழ்பவானி பாசனம் தந்த தியாகி ஈஸ்வரனை நினைவுகூர்ந்து மேடையில் படம் வைக்கிறோம். ஆனால் தி.மு.க.வில் ஊழல் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜியின் புகழ் பாடுகிறார்கள். நாங்கள் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் பெயர் சூட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். நீங்கள் என்ன செய்தீர்கள். தமிழக அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் பட்டியல் உள்ளது.

 முதல்-அமைச்சர் தனது கோபத்தை போக்க பா.ஜனதா தொண்டர்களை கைது செய்கிறார். கைதுகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். ஒவ்வொரு பா.ஜனதா தொண்டனும் ஜெயிலுக்கு சென்று திரும்பும் போது இன்னும் பிடிப்புடன் வருகிறான். எனவே இந்த கைதுகள் மூலம் பா.ஜனதா வளர்ச்சிக்கும், தொண்டனின் உறுதிக்கும் உதவி செய்கிறீர்கள். 2024-ல் மோடி மீண்டும் பிரதமர் ஆவதை உங்களால் தடுக்க முடியாது. பா.ஜனதாவின் சித்தாந்தத்துக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். சாதி வைத்து நீங்கள் செய்த அரசியலை மோடி ஏற்கனவே தகர்த்து விட்டார். இனி உங்கள் மத அரசியலும் எடுபடாது. என்றார் 

 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஒரே நாடு ஒரே தேர்தல் வரிசையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நீண்ட காலமாக முன் வைக்கும் ஒன்று பொது சிவில் சட்டம்.கடந்த 4 தசாப்தங்களாக பல்வேறு தீர்ப்புகள் மூலமாக பொது சிவில் சட்டத்தை நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக கொண்டு வரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

இந்தநிலையில் பொது  சிவில் சட்டம் குறித்து அம்பேத்கார் சொன்னதை 1லட்சம் நகல் எடுத்து அனுப்புவதாக சொன்னதும் , எதற்கெடுத்தாலும் அம்பேத்கார் பெயரை சொல்லி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் கப்சுப் ஆகிவிடடார்களா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்