2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளிலும் போட்டியிட்டது. மநீம கட்சியின் கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சியும் 40 40 இடங்களில் போட்டியிட்டனர். இருப்பினும் அந்த இரு கூட்டணி கட்சிகளாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜகவில் வானதி சீனிவாசன் போட்டியிட்டு 1,728 ஓட்டுகள் வித்தியாசத்தில் கமலஹாசனை தோற்கடித்து வெற்றியடைந்தார்.
இந்த நிலையில் மறுபடியும் கமலஹாசன் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் கோவையில் போட்டியிட விரும்பி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கோவை தொகுதி முழுவதும் தற்போது பாஜகவிற்கு சாதகமான தொகுதியாக பார்க்கப்படுகிறது, இதனால் கமலஹாசன் கோவையில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து பாரதி ஜனதா வேட்பாளராக யாரை எதிர்கொள்ள வைக்கலாம் என்ற பேச்சும் பாரத ஜனதா கட்சி சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் கமலஹாசன், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலுக்கு இன்னும் பத்து மாத காலமே உள்ள காரணத்தினால் தனது தேர்தல் பணிகளை தீவிர படுத்த வேண்டும் மற்றும் வெற்றியை எளிமையாக்க வேண்டும் என்பதற்காக திமுகவுடன் கைகோர்க்க உள்ளதாகவும் திமுகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எதிர்கொள்ள உள்ளதாகவும் சில வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனையில் கமலஹாசன் உள்ளதால் தான் கோவை தொகுதியில் உள்ள மக்களை கவரும் விதத்தில் பல நடவடிக்கைகளில் தற்போது அவர் கட்சியினர் ஈடுபட்டு வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக தான் சமீபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பெண் பேருந்து டிரைவருக்கு சொந்தமாக புதிய கார் வாங்கி கொடுத்துள்ளது அடங்கும் என்று பேசப்படுகிறது.
கடந்த முறை அடைந்த தோல்வியை இந்த முறை வெற்றியடைந்து சரி கட்டி விட வேண்டும் என்பதற்காக கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போட்டியிட்டதில் வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர் இதனால் இந்த முறை நாமும் திமுக கூட்டணியில் போட்டியிட்டால் வாக்குகளை அதிகமாக பெற்று ஒரு கணிசமான இடத்தை இந்த தேர்தலில் பெற முடியும் என்று ஆலோசித்தே கமலஹாசன் இந்த திட்டத்தை இறங்கி உள்ளதாக அரசியல் வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.
மறுபக்கம் கோவை தொகுதியில் கமலஹாசன் போட்டியிட உள்ளார் என்ற செய்தி பாஜகவிற்கு கிடைத்ததும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான பலமான வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும் என பாஜக தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மறுபுறம் திமுக கூட்டணியில் கமலஹாசன் கொங்கு மண்டலத்தை குறிவைத்து வந்தாலும், கமலஹாசனுக்கு கோவை தொகுதியை ஒதுக்க திமுக யோசித்து வருவதாக தெரிகிறது. வேண்டுமானால் தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்கலாம் என திமுக யோசித்து வருகிறது, ஆனால் வாங்கினால் கோவை தொகுதியை வாங்க வேண்டும் வேறு தொகுதி கொடுத்தால் கமலஹாசனுக்கு வெற்றி வாய்ப்பை தராது எனவும் கமலஹாசன் தரப்பினர் கூறுவதாலும் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் நீதி மய்யம் குழம்பி வருகிறது, இஷ்டம் இருந்தால் வரட்டும் இல்லையெனில் கமல் வர வேண்டாம் என்பது போன்ற நிலையில் திமுக இருந்து வருவதாலும் கமல் தரப்பு அடுத்த கட்ட தீவிர ஆலோசனையில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன!