24 special

ஆ ராசாவுக்கு திடீரென பேய் ஓட்டிய அண்ணாமலை! பாஜகவுக்கு அமைச்சர் துரைமுருகன் ஆதரவு!

annamalai and a rasa
annamalai and a rasa

திமுக பொது செயலாளர் துரைமுருகன் பாஜக பிசாசு போல வளருகிறது அனைத்து அதிகார மட்டத்திலும் நமக்கு சமமாக மோதுவார்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பேசியது அரசியலில் தாக்கத்தை உண்டாக்கிய நிலையில் ஏன் துறைமுருகன் அவ்வாறு பேசினார் என்பது குறித்து ஆ. ராசா பாடம் எடுத்தார்.


சரியாக எங்க பொது செயலாளர் கூறி இருக்கிறார் பிசாசு என்ற ஒன்று இல்லவே இல்லை இருப்பது போல காட்டி உடுக்கை அடித்து ஓட விடுவார்கள் அது போல் இல்லாத பாஜகவை நாங்கள் உடுக்கை அடித்து விரட்டுவோம் என பேசி இருந்தார்.

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீலகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பதிலடி கொடுத்தார். Mp ராசா எங்கு இப்போது சாம கோடாங்கி மாதிரி பேய் ஓட்டி கொண்டு இருக்கிறார் என தெரியவில்லை முதலில் அவரை ஓட்டுவதற்கான நேரம் வந்துவிட்டதாக அண்ணாமலை நக்கலாக பதிலடி கொடுத்தார்.

பிசாசை உடுக்கை அடித்து விரட்ட வேண்டும் என தெரிவித்த ஆ. ராசாவிற்கு, ஆ ராசாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விரட்ட வேண்டிய நேரம் வந்து விட்டதாக அண்ணாமலை தெரிவித்து இருப்பது ஆ ராசாவை பேய் ஒட்டியது போல் உள்ளது என பாஜகவினர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.