நடிகர் விஜய் திரைப்படங்கள் வெளியாகிறது என்றால் எப்போதும் அதில் அரசியலும் கலந்து வருவது இயல்பு ஆனால் இந்த முறை வந்து இருப்பதோ புது விதமான அரசியல் சிக்கல் என்கின்றன விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகளை தெரிந்தவர்கள்.
விஜய் நடிப்பில் பொங்கல் அன்று திரைக்கு வர இருக்கும் திரைப்படம் வாரிசு அதே நாளில்தான் அஜித் நடிப்பில் தயாராகியுள்ள துணிவு திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது, துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வெளியிட இருக்கிறார், விஜய் படத்தை தனியார் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த சூழலில் விஜய் திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதற்கு பதில் வேறொரு நாளில் வெளியிட முதலில் விஜயிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம், ஆனால் விஜய் தரப்பிலோ கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம்
முறையான எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை எனவே இந்த முறை வெற்றியை பதிவு செய்யவேண்டிய இடத்தில் இருப்பதால் நிச்சயம் பண்டிகை நாளில் வெளியிட வேண்டிய அவசியத்தை எடுத்து கூறி இருக்கிறார்கள்.
அதுவரை அமைதியாக போன இரண்டு தரப்பும் தற்போது மறைமுக கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் ஒரு கட்டத்தில் விஜய் படத்திற்கு தியேட்டர்கள் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும் நிலையை உண்டாக்க வேண்டும் என ஒரு தரப்பு செயல்பட்டதாம்.
இதை சற்றும் எதிர்பார்க்காத விஜய் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்து விட்டதாம் கடந்த முறை தேர்தலில் சைக்கிள் எல்லாம் ஓட்டி மறைமுகமாக வாக்கு சேகரித்தது எல்லாம் இந்த நிலைக்கு வர தானா என கடும் அதிர்ச்சி அடைந்து விட்டதாம் விஜய் தரப்பு, இதை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் நேரடியாக ஆந்திராவில் உள்ள டெல்லியில் முன்னாள் மிக பெரிய பொறுப்பில் இருந்தவரை அணுகி தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார்.
அவர் சில ஐடியாக்களை கொடுத்து இருக்கிறாராம் அதன் படிதான் விஜய் தனது ரசிகர்களை அவரது பண்ணை வீட்டில் சந்தித்ததாக கூறப்படுகிறது, இது ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் மீது விழும் மறைமுக அழுத்தம் தானாக விலகி விடும் என்று ஐடியா கொடுத்து இருக்கிறாராம்.
அதோடு நில்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது எங்காவது ஏதாவது ஒரு மாநிலத்தில் நடிகர்கள் திரைப்படம் வெளியாகும் போது பாஜக தலைமை அழுத்தம் கொடுத்து பார்த்து இருக்கிறீர்களா? என்ன வேண்டுமானாலும் பாஜகவை விமர்சனம் செய்தாலும் தனிப்பட்ட விஷயங்களில் பாஜக எப்போதும் தலையிடாது.,
ஆனால் நீங்கள் அதனை எல்லாம் இனியாவது புரிந்து கொள்ளுங்கள் என ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் கூறி இருக்கிறாராம். இதையும் மீறி விஜய் படத்திற்கு அழுத்தம் தொடர்ந்தால் அவர் எடுக்கும் முடிவுகள் வெளிப்படையாக அரசியல் சார்ந்ததாக இருக்கும் என்கின்றன விஜயின் பண்ணை வீட்டு ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏன் நடைபெற்றது என்பதை தெரிந்தவர்கள்.
ஏற்கனவே நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாவதில் கடும் இழுபரி உண்டாக சிம்புவின் தந்தை தாய் இருவரும் முதல்வர் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்க போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் வேதனையை வெளிப்படுத்தியது குறிப்பிட தக்கது.