பாராளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசிய ஒவ்வொரு பேச்சிற்கும் அதே பாணியில் சுட சுட பதிலடி கொடுத்து இருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிலும் கனிமொழிக்கு சவால் விடுத்து இருப்பது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
அண்ணாமலை தெரிவித்ததாவதுதி.மு.க., அரசியல் வாதிகள், தங்கள் கட்சிக் கூட்டங்கள் என்று கருதி, பொய்களையும் பாதி உண்மைகளை மட்டும் பரப்புவதற்கு, நாடாளுமன்ற அரங்கைப் பயன்படுத்துவது தொடர்கதையான ஒன்று
திமுக எம்பி கனிமொழி லோக்சபாவில் தனது கட்சியின் நீண்டகால பாரம்பரிய பொய்களை பரப்பி இருக்கிறார்.பேச்சை தொடங்குவதற்கு முன்பு கனிமொழி சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மாதிரிகளை உருவாக்குவதில் திமுக எவ்வாறு அறியப்படுகிறது என்பது பற்றி புகழ்ந்து பேசினார் எங்கே உங்கள் சமுக நீதி என்ன என பார்க்கலாம் வாங்க?
சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் SC சகோதர, சகோதரிகள் பயன்படுத்தும் குடிநீரில் மனித மலம் கலந்து மாசுபட்டது. மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இது தான் சமூக நீதியா?திமுக அமைச்சர் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரதிநிதி ஒருவரை ஜாதியைக் காட்டி இழிவுபடுத்தி பேசியதை மேடையில் பார்த்தோம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது கூட கொடிகளை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை என்பதை திமுக ஆட்சியில் தமிழகத்தில் பார்த்தோம்
SC சகோதர சகோதரிகள் பற்றி திமுக எம் பி ராசாவின் பேச்சு தேசிய அளவில் சீற்றத்தை ஏற்படுத்தியது என்பது தெரியாதா?திமுக லோக்சபா எம்பி திரு டிஆர் பாலு இந்து கோவில்களை உடைப்பதில் பெருமிதம் கொண்டார், நாங்கள் என்ன தீண்ட தகாதவர்களா என தயாநிதி மாறன் பேசியது சமூக நீதியா என வெளுத்து எடுத்து இருக்கிறார் அண்ணாமலை.
மேலும் சமீபத்தில், சேலத்தில் ஒரு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவில்களுக்குள் நுழைய பட்டியல் சமுதாய சகோதரனை மறுத்தது நினைவில்லையா?இப்படி பட்ட திமுகவின் சமூக நீதி கொள்கையை பட்டியல் போட்டால் பத்திரிகையின் 20 பக்கங்களும் பத்தாது என கனிமொழிக்கு அவரது பாணியில் இதுதான் உங்கள் திமுக ஆட்சியின் சமூக நீதியா என கேள்வி எழுப்பியதுடன் பதிலடி கொடுத்து இருக்கிறார் அண்ணாமலை.