24 special

விடாது துரத்தும் சிபிஐ..! நைசா சூப்பர் சாக்கு சொல்லி எஸ்கேப் ஆன ராசா..!

YA rasa
YA rasa

திமுக எம்.பி ஆண்டிமுத்து ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கு புதிய வேகமெடுத்துள்ளது. திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது ஏற்கனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முறைகேடு செய்து மத்திய அரசுக்கு லட்சணக்கான கோடி ரூபாய் வருமானம் வருவதை இழப்பு ஏற்படுத்தி விட்டார் என ஊழல் வழக்கு ஒன்று நடந்தது அந்த வழக்கில் உள்ள சாதகங்களை பயன்படுத்தி ஆ.ராசா விடுதலையான நிலையில்.,


அந்த வழக்கை மீண்டும் சிபிஐ கையில் எடுத்து மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் தற்பொழுது மேலும் ஒரு ஊழல் வழக்காக வருமானத்திற்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கும் சேர்ந்துள்ளது.

திமுக நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா அவர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்த சமயம் கடந்த 2015ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றத்தின் பெயரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசாவுக்கு சொந்தமான அனைத்து இடங்களில் குறிப்பாக  சென்னை, திருச்சி, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

அந்த சோதனை முடிவில் ஆ.ராசா சொத்து குவித்துள்ளார் என பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஏராளமான சொத்து விவரங்கள், பினாமி மீது அவர் வாங்கி குவித்திருக்கும் முதலீடுகள், தனது பதவியை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்து அடித்து வைத்த பணம் மற்றும் நிலங்களின் விவரங்கள் ஆவணங்களாக கைப்பற்றப்பட்டன. 

மேலும் 7 வருட விசாரணைக்கு பிறகு எம்.பி. ஆ.ராசா மற்றும் அவரது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எதிராக கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமானத்தை விட 579% அதிகமாக, 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. அதனை வாங்கிக்கொண்ட ராசா இந்த முறை வழக்கை தாமதப்படுத்த விசாரணைக்கு வரவில்லை. 

மீண்டும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக எம்.பி.ஆ.ராசா தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்த நிலையில் வழக்கில் ஆஜராவதில் இருந்து தப்பிக்க ஆ.ராசா நாடாளுமன்ற கூட்டதொடர் நடைபெற்று வருவதை காரணம் காட்டி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டார்.

இதனால் நீதிமன்றம் ஆ.ராசா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை அடுத்த பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த காரணத்தை வேறுவழியின்றி ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

எப்படியாவது இந்த வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என  ஆ.ராசா தரப்பு முயற்சி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே நேரத்தில் வழக்கை விரைவாக முடிவிற்கு கொண்டுவர தீவிரமாக சிபிஐ களம் இறங்கி இருப்பதுடன் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த ஆவணங்களும் கைப்பற்ற பட்டு இருப்பதுடன் ஆ ராசாவின் பினாமி சொத்து என்று பல கோடி மதிப்புள்ள நிலத்தை அமலாக்கதுறை முடக்கி இருப்பது பெரும் பின்னடவை ஆ.ராசாவிற்கு கொடுத்து இருக்கிறதாம்

2ஜி ஊழல் வழக்கில் ஆ ராசா தப்பித்தாலும் நிச்சயம் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் ஆ.ராசாவிற்கு எதிரான பிடியை வலுவாக சிபிஐ மற்றும் அமலாக்காத்துறை முடக்கி இருக்கிறதாம்.