24 special

குருமூர்த்திக்கு போன் போட்ட அண்ணாமலை; அதிர்ந்து போன விசிக!

thirumavalan , annamalai
thirumavalan , annamalai

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் தமிழ்நாட்டை தனி நாடாக மாற்றுவதே தமிழ் தேசியத்தின் லட்சியம் என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குருமூர்த்தி என்ற ராணுவ வீரர் வீடியோ வெளியிட்டிருந்தார். 


அதில் சுயநலத்திற்காக திருமா மாநிலத்தை பிரிக்க நினைப்பதாகவும், நாட்டை பிளவுபடுத்துவதை பார்க்கத் தான் நாங்கள் ராணுவத்தில் பணியாற்றுகிறோமா? என அடுக்கடுக்காய் பல கேள்விகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் விசிக நிர்வாகிகள் சிலர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரை தொலைபேசியில் மிரட்டியுள்ளனர். அதில் திருமாவளவனைப் பற்றி பேசியது தவறு என்றும் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அச்சுறுத்தினர். 

அந்த ஆடியோவை வெளியிட்ட ராணுவ வீரர், துப்பாக்கி, பீரங்கிக்கு கூட பயப்படமாட்டேன். நீங்க என்னை போன் செய்து மிரட்டினால் பயந்துவிடுவேனா. யாரிடமும் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் எனத் தெரிவித்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெயரளவிற்கு இருக்கிற சில அரசியல் கட்சி ஒன்று, நாட்டிற்காக போராடும் ராணுவ வீரரை மிரட்டியுள்ளது. ‘நீ டெல்லியில் இருக்குற... உன் குடும்பம் இங்க தானே இருக்கு பார்த்துக்குறோம்’ எனத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சில அரசியல் கட்சி தேச விரோதமாக பேசுவதை பார்த்துக்கொண்டிருக்கும், ஆனால் முதன் முறையாக நாட்டிற்காக பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ஒருவரை மிரட்டுவதை பார்க்கிறோம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நாம் ஆளுங்கட்சியில் தான் இருக்கிறோம் என்ற தைரியத்தில் உள்ளனர். எனவே தான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு எனது ஆதரவைத் தெரிவித்தேன். எனது பர்சனல் எண்ணைக் கொடுத்து எந்த உதவியாக இருந்தாலும் அழைக்கும் படி தெரிவித்துள்ளேன் எனத் தெரிவித்தார்.