நடக்கப்போகும் லோக்சபா தேர்தலுக்காக திமுக தனது கூட்டணி வேட்பாளர்களை முதல் கட்சியாக அறிவித்தது. அதிமுக தரப்பிலும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது, இந்நிலையில் நேற்று மாலை மூன்றாவது கட்சியாக பாஜக லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என்பது போல் வேட்பாளர்களை அறிவித்தது. அதில் 9 வேட்ப்பாளர்கள் கொண்ட மூன்றாம் கட்ட பட்டியலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்பத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
பாஜக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைந்துள்ள நிலையில், பாஜக குறைந்தது 20 இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், தனியாக கூட்டணியை கட்டமைத்துள்ளது பாஜக. தொகுதி பங்கீடு தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் மேற்கொண்ட பாஜக அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. 20 தொகுதிகளில் பாஜக நேரடியாகப் போட்டியிடுகிறது. 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
விரைவில் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்க கூடும் என தெரிவித்தார்.இந்நிலையில், பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று மாலையே வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னை, வினோஜ் பி செல்வம் வேலூர், ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி) கிருஷ்ணகிரி, நரசிம்மன் நீலகிரி, எல்.முருகன் கோவை, அண்ணாமலை பெரம்பலூர், பாரிவேந்தர் (இ.ஜ.க) திருநெல்வேலி, நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியயோர் அந்த பட்டியலில் இடம் பெற்றனர்.
இந்த பட்டியலில் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. அதாவது, அண்ணாமலை தான் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பலமுறை கூறி வந்த நிலையில், வெளியான வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றது. மேலும், ஏற்கனவே மத்திய அமைச்சர் எம் முருகனுக்கு மத்தியவையில் பதவி கொடுத்ததால் நீலகிரியில் அவர் போட்டியிடமாட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது, ஆனால் அவரது பெயரும் இடம்பெற்றது. புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநராக இருந்த தமிழிசை பதவியை ராஜினாமா செய்ததும் நாடளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது அதே போ அவருக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணாமலை அவர்கள் கோவையில் போட்டியிட காரணம் கொங்கு பகுதியில் பாஜக எப்போதும் ஒரு கண் வைத்துள்ளது. பாஜக கட்சிக்கு கோவையில் எப்போதும் கணிசமான ஆதரவு இருக்கும். அதன் அடிப்படையிலும் கொங்கு பகுதிகள் அனைத்தும் அதிமுக கைவசம் என்று சொல்லும் அதிமுகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அண்ணாமலை போட்டியோடுகிறார் என்று கூறப்படுகிறது. திமுகவும் கோவையில் எப்போதும் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி வந்த நிலையில் இந்த முறை திமுகவே வேட்பாளரை அறிவித்துள்ளது. மேலும், கொங்கு பகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொங்கு பகுதியில் நேற்று அண்ணாமலையின் பெயர் அறிவித்ததும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அண்ணாமலைக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பக்கம் திமுக அதிமுக அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என்று பாடு பட்டு வருகிறதாம். அதையெல்லாம் பாஜகவினர் கண்டுகொள்ளாமல் அண்ணாமலைக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். போட்டியே திமுக - பாஜக இடையே என்ற நிலையில் அதிமுகவை கண்டு கொள்ளவில்லை என பாஜகவினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.