24 special

மோடிக்கு இப்படியெல்லாம் ஒட்டு கேட்குறாங்களா...? வீடியோ செம்ம வைரல்....

PMMODI
PMMODI

ஒரு பத்து வருஷத்திற்கு பின்னோக்கி நாம் செல்லும் பொழுது டிஜிட்டல் யுகத்தில் நாம் இல்லை, ஆன்லைன் மூலம் ஏதாவது பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும் என்றால் அது தவறாக வேறு எங்காவது சென்று விடும் நமது பணம் தான் வீணாகிவிடும் என்ற பதட்டம் இருந்தது, புதிய ஸ்டார்ட் நிறுவனங்களை தொடங்குவது அதிக சிக்கலும் வரைமுறைகளும் இருந்தது ஒருவர் தன் திறமைக்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறாமல் இருந்தார் உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா வளர்ந்து கொண்ட நாடாகவே பார்க்கப்பட்டது, ஜம்மு காஷ்மீர் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலில் அதன் அழகை பார்க்க யாரும் இல்லாததால்  தவித்துக் கொண்டிருந்தது, ஆனால் இன்றோ இவை அனைத்தும் சாத்தியமாக்கப்பட்டு ஒரு டிஜிட்டல் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் டிஜிட்டல் முறையிலே வீட்டிலிருந்தே வங்கி கணக்குகள் தொடங்கப்படுகிறது வங்கி பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படுகிறது, இருந்த இடத்தில் உலகில் எந்த மூலையில் இருக்கும் பொருட்களை வேண்டுமானாலும் ஆர்டர் செய்து அதனை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு வந்து சேர்க்கும் தகவல் தொழில்நுட்பமும் சீராக உள்ளது, ஜம்மு காஷ்மீரும் தீவிரவாத அச்சுறுத்தலை இல்லாமல் சுதந்திரமாக செயலாற்றுகிறது உலகில் இருந்த பல மக்கள் சுற்றுலாவிற்காக ஜம்மு காஷ்மீர் செல்கிறார்கள்.


அதோடு உலக நாடுகள் மத்தியில் இந்தியா ஒரு முன்னுதாரணமான நாடாகவும் 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டு என்று கூறும் அளவிற்கு இந்தியா தற்போது டிஜிட்டல் யுகத்தில் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. இவை அனைத்திற்கும் யார் காரணம் என்று திரும்பி பார்க்கும் பொழுது மத்தியில் பிரதமராக வீற்றிருக்கும் நரேந்திர மோடியும் அவர் கொண்டிருந்த பார்வை எதிர்காலத்திற்காக அவர் வைத்திருந்த திட்டங்கள் செயல்பாடுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்திய நலத்திட்டங்களை செயல்படுத்தி அடிக்கல் நாட்டி தற்போது நாட்டின் ஒரு ஒரு மூலையிலும் ஒவ்வொரு விதமான புது கட்டிடங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அதோடு பிரதமர் உலகின் எந்த மூலையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரம் சென்றால் ஒரு பிரம்மாண்டத்தை அவர்கள் பார்க்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறார். மேலும் நம் நாட்டில் சிறு பெட்டிக்கடை முதல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்கின்ற டாப் நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருவதை பார்த்து உலக நாட்டு தலைவர்கள் மிரண்டு போய் உள்ளார்கள்.

மேலும் பல உலக நாடுகள் இந்தியாவுடன் பரஸ்பரமான நல்லுறவையும் பல ஆலோசனைகளை கேட்கவும் நட்பு பாராட்டி வருகிறது. இத்தனை காரணங்கள் போதாதா ஒருவரை மீண்டும் பிரதமராக மாற்றுவதற்கு இன்று பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்த ஒவ்வொரு நலத்திட்டங்களையும் மக்கள் மத்தியில் முன்வைத்து. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதற்கு நாம் ஓட்டு போட வேண்டும் இல்லையென்றால் நாம் உயிருடன் இருப்பதற்கே ஒரு பயனில்லை என ஒரு துறவி கூறியுள்ளார். அதாவது நமக்கு ஒரு ராஜா கிடைத்திருக்கிறான் யாருக்கெல்லாம் பாக்கியம் இருக்கிறதோ அவர்களெல்லாம் இந்த ராஜாவிற்கு ஓட்டு போடும் பாக்கியமும் நமக்கு கிடைக்கும்! எப்பேர்ப்பட்ட தேசமாக உலகத்திற்கே இன்று மோடி வழிகாட்டியாக உள்ளார். ஓட்டு போட வேண்டும் உலகமே நம் தேசத்தை மதிக்கிறது, சாஸ்திரங்கள் தெரிந்த சாதுக்களை மதித்த வேத வித்துக்கள் பிராமணார்கள் அனைவரையும் மதித்து தன்னலமற்று வாழக்கூடிய ஒரு ராஜா நமக்கு கிடைத்திருக்கிறான், அவனுக்கு நாம் ஓட்டு போடவில்லை என்றால் நாம் தற்கொலை செய்து இறப்பை தேடுவதற்கு சமம்! அப்படிப்பட்ட ராஜாவிற்கு நாம் நன்றியை தெரிவிப்பதற்கு  நன்றி கடனை தீர்ப்பதற்காக நாம் ஓட்டு போட வேண்டும் அதுவே நம் வாழ்வதற்கு சமம்! இப்படிப்பட்ட ஒரு ராஜா இதற்கு முன்பு கிடைத்தது இல்லை இதற்கு பிறகும் கிடைக்கப் போவதில்லை! தன்னலமற்று வாழ்ந்த விவேகானந்தரை போன்றவர் பிரதமர் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு ஓட்டு போடுவது குறித்து தன் ஆழ்மனதில் உள்ள அனைத்தையும் பேசியுள்ளார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது.