தமிழக முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது இரண்டு விஷயங்கள்தான் ஒன்று ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது அதில் யார் ஆட்சியைப் பிடிக்க உள்ளார்கள் என்பது மற்றொன்று தமிழகத்தில் உருவெடுத்திருக்கின்ற போதைப்பொருள் விவகாரத்தில் உண்மை குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கிற நிலையில் அதனை தொடர்ந்து யாருக்கெல்லாம் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கும் யாரெல்லாம் கைது செய்யப்பட உள்ளார்கள் யாரெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்கள் என்பது! ஏனென்றால் போதை கடத்தலின் முக்கிய குற்றவாளியாகவும் கடத்தல் கும்பலின் தலைவனாகவும் கருதப்படுகின்ற ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு இருக்கிறார் அவர் திமுகவின் பிரமுகராகவும் இருந்துள்ளார் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் என்பதும் அதனால் ஜாபர் சாதிக்கு அரசியல் பிரமுகர்களுக்கும் சினிமா வட்டாரத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கும் முக்கிய தொடர்பு இருக்கலாம் என்ற செய்திகள் வெளியானதை அடுத்து ஜாபர் சாதிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலும் அது நிரூபணம் ஆகி உள்ளது.
இப்படி இந்த போதை கடத்தல் விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி க் கொண்டிருக்கிற நிலையில் திமுகவுடன் முக்கிய தொடர்பையும் திமுக பிரமுகர்களின் ஆதிக்கம் உள்ள ஒரு நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். முன்னதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதத்தில் திமுக தலைவர்கள் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார் அதில் ஜி ஸ்கொயர் நிறுவனம் பற்றிய முழு விவரங்களும் அந்நிறுவனம் கொண்டிருக்கும் சொத்து விவரங்கள் செய்த முறைகேடுகள் குறித்த அனைத்தும் தெள்ளத்தெளிவாக இடம் பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் தொழிலதிபருக்கும் திமுகவின் முக்கிய புள்ளியும் முதல்வரின் மருமகனுமான சபரீசனுக்கும் அதிக நெடுக்கம் உள்ளதாகவும் இந்த அதிகாரத்தாலே காவல்துறையினர் இந்த நிறுவனம் பக்கம் செல்வதே இல்லை என்றும் அரசு துறை அதிகாரிகள் கூட அந்த நிறுவனத்தின் பெயரை கேட்டால் அஞ்ச வேண்டிய நிலை இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
இதனை அடுத்து ஜி ஸ்கொயர் நிறுவனம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் வருமான வரி செலுத்துவதில் மோசடி செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனால் தமிழகத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையை செய்தனர். அந்த சோதனையிலேயே பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர். அப்படி கைப்பற்றி சென்ற ஆவணங்களில் சட்டவிரோதமான பண பரிமாற்றம் இருப்பது தெரிய வந்தால் மீண்டும் சோதனைகளை வருமானவரித்துறை நடத்தும் என்ற வகையிலான பேச்சுகள் அடிபட்டு வந்தது. அதற்கு ஏற்றார் போல் தற்போது வருமானவரி துறையினர் மீண்டும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனையில் இறங்கி உள்ளது இதன் மூலம் சட்டவிரோதமான பணப் பரிமாற்றங்களில் ஜி ஸ்கொயர் ஈடுபட்டு உள்ளது என்பதை அதிகாரிகள் கண்டறிந்து அதற்குப் பிறகு இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது.
மேலும் இது தேர்தல் நேரம் என்பதாலும் வருமான வரி துறையின் பறக்கும் படை அதிகாரிகளும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது அதோடு பண பட்டுவாடா குறித்த தகவல்களும் வருமானவரித் துறையினருக்கு கிடைத்ததாகவும் அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் விவகாரம் திமுகவிற்கு பெரும் தலைவலியை கொடுத்து வருகிற நிலையில் முடிந்து போனதாக நினைத்த ஒரு விவகாரம் மீண்டும் துளிர்விட்டது போன்று ஜீ ஸ்கொயர் நிறுவனம் மீது வருமான வரித்துறை சோதனையில் இறங்கி இருப்பது திமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த சோதனை முடிந்தும் சில விஷயங்களை அமலாக்கத்துறை கைப்பற்றி இருப்பதாகவும், விரைவில் தேர்தல் நேரம் என்பதால் சில விவகாரங்கள் பூதாகரமாக வெடிக்கும் எனவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன...