கோவை பாராளுமன்ற தொகுதி மீது மக்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர், கோவை தொகுதியில் நான்கு முனை போட்டிகளில் நான்கு முனை போட்டியாக நிலவி வருகிறது. இந்நிலையில், தினமும் களத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் நடத்தினது வருகிறது. இதனால் இரு பெரிய அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நடைபெறும் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் நடைபெறும் இந்த தேர்தல். அனைவரும் திரும்பி பார்க்கும் விதமாக கோயம்பத்தூர் தொகுதி இருந்துள்ளது. கோவை தொகுதியை பொறுத்தவரை பாஜக சார்பாக தமிழகம் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக களத்தில் இறங்குகிறது. திமுக சார்பாக கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகிறார்.
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக செதுக்கியிருந்த நிலையில், கோவை பகுதியின் தலைவனாக எஸ். பி வேலுமணி இருந்து வருகிறார். கோவை தொகுதியில் கவுண்டர் சமுதாயம் அதிகம் உள்ள நிலையில், அதிமுக கவுண்டர் சமுதாய மக்கள் ஒட்டு கவரும் வகையில் அந்த சமுகத்தை சார்ந்த வேட்பாளரை அறிவிக்காமல், நாயுடு சமுதற்பாதி சேர்ந்த சிங்கை இராமச்சந்திரன் என்பவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே அந்த கட்சிக்குள் பிரச்னை இருப்பதாகவும். இதனால் கவுண்டர் சமுதாயத்தினர் பாஜகவுக்கு வாக்குகளை செலுத்த முன் வந்துள்ளார்களாம்.
திமுக வேட்பாளரான கணபதி ராஜ்குமாருக்கு மக்கள் வெறுக்க தொடங்கியுள்ளனர். காரணம், அவர் ஏற்கனவே அதிமுக கட்சியில் கோவை மாநகர் மேயராக இருந்துள்ளார். அவர் வருடம் ஒரு முறை கட்சி விட்டு கட்சி தவுவதால் வெற்றி பெற செய்தால் ஒரு பயனும் இல்லை என்றும் அவர்களும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பக்கம் திரும்பியுள்ளனர். மேலும், களத்தில் அதிமுக- பாஜக இடையே தான் போட்டி என்றாலும் அந்த போட்டியிலிருந்து சற்று இறங்கியுள்ளது அதிமுக.
அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தெலுங்கு சமுதாயத்தினர் என்பதால் தெலுங்கு வாக்காளர்களின் வாக்குகளை பாஜக தனது பக்கம் கொண்டுவர சமீபத்தில் சந்திர பாபு மகன் நாரா லோகேஷ் அவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழ்நிலையில், சிங்கை ராமச்சந்திரனுக்கு தனது சமுதாய மக்களின் வாக்குகள் தனக்கு வருமா என்பதே சந்தேகத்தை கொடுத்துள்ளது. திமுக தற்போது வரை கோவையில் முன்றாவது இடத்தில் தான் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தனியார் சேனல் ஒன்று கோவை மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் மக்கள் கூடுவது 60 ஆண்டுகளாக மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு வாக்குகளை செலுத்தி வந்த நிலையில், பாஜகவுக்கு தங்களது வாக்குள் என்றும் தேசிய கட்சிகள் கோவையில் வெற்றி பெற்றால் இங்குள்ள நிறுவனத்திற்கு வளர்ச்சி பெருகும் மற்றும் கோவை வளர்ச்சி அடையும் என கூறுகின்றனர். அதிமுங்க கோட்டை தான் கோயம்பத்தூர் ஆனால், இந்த முறை மக்களவை தேர்தலில் படித்த இளைஞரான அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு என்பது அதிகரித்துள்ளது என தெரிவிக்கின்றனர். அதிகமாக அண்ணாமலை பெயர் மட்டுமே கூறுவதால் மக்களிடத்தில் தற்போது அதிமுக, திமுக போன்ற கட்சிகள் களத்தில் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அண்ணாமலை கோவை தொகுதியில் ஒரு ரூபாய் கொடுக்காமல் வரலாற்று சாதனை படைப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.