24 special

பிரதமர் மோடிக்கு நடிக்க வேண்டிய அவசியம் இல்லை...ஆவேசமாக பேசிய தமிழிசை..!

Stalin, Tamilisai
Stalin, Tamilisai

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற ஐந்து நாட்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்களும் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


இன்று பாஜக தலைமை நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில் முக்கிய அறிவிப்புகள் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும், 3 கோடி பெண் லட்சாதிபதிகள் உருவாக்கப்படும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் நீட்டிக்கப்படும், 2025ஆம் ஆண்டு பழங்குடியின ஆண்டாக கொண்டாடப்படும், 70 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் பயன்பெறலாம், மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும், 2036ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், முத்ரா யோஜனா கடன் உச்சவரம்பு 20 லட்சமாக உயர்த்தப்படும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும் என அறிவித்தது.

இது மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இன்று அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தென் சென்னை பஜ வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, டிவி சீரியல் போன்று பாஜக நாடகம் நடத்துவதாக ஸ்டாலின் விமர்சனம் செய்திருப்பது குறித்த கேள்விக்கு, சினிமாவிலும், டிவி சீரியலிலும் நடித்து அவர் தான் பிரபலமானார். பிரதமர் மோடி அவர்கள் நடிப்பதற்கு ஒன்றும் இல்லை.. ஸ்டாலின் எதற்காக இப்படி திசை மாறி செல்கிறார் என தெரியவில்லை. 

இன்று கலைஞர் இருந்திருந்தால் மோடி அவர்களின் செயல்களை கண்டு பாராட்டி இருப்பார். ஆனால், எதற்காக ஸ்டாலின் திசை மாறி பேசுகிறார் என தெரியவில்லை. பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் வந்துள்ளது. ஆனால், திமுக சொன்னது எல்லாம் பொய் தான் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்யப்போகிறோம் என கூறினார்கள் அது என்னாவது, அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை என்று கூறினார்கள் அது என்னவானது? திமுக சொல்வது பொய் தான் என ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

ஏற்கனவே ஸ்டாலின் பிரதமர் மோடி குறித்து விமர்சமா செய்திருந்த நிலையில், தமிழிசை ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், ஸ்டாலின் பாஜக நாடகம் நடத்துகிறதுஅதாவது, பாஜக தான் தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை இயக்குகிறது என விமர்சனம் செய்திருந்தார். ஆனால், ஒரு பக்கம் அரசியல் விமர்சகர்கள் கூறுவது திமுகவின் கோட்டையான சென்னையில் இந்து முறை ஓட்டை விழும் என கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.