தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சூப்பராக ஓடி கொண்டு உள்ள ஒரு சீரியல்தான் கயல் என்னும் சீரியல்!! அதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் சைத்ரா ரெட்டி!! சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீதும் டான்ஸ் ஆடுவது போன்ற கலைகள் மீதும் அதிகமாக ஆர்வம் கொண்டு வந்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது ஒரு பிரபல நடிகையாகவும் சின்னத்திரையில் வலம் வந்து கொண்டுள்ளார். இவர் கயல் சீரியலில் நடிப்பதற்கு முன் மற்றொரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்னும் சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வந்தார். அதிலும் இவருடைய நடிப்பு சூப்பராக இருந்தாலும் கூட அந்த அளவிற்கு வில்லி கேரக்டர் என்பதால் ரசிகர்கள் அதிக அளவில் இல்லாமல் இருந்தனர். அதன் பிறகு அந்த சீரியல் முடிவிற்கு வந்தது.
அதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு பிரபலமான தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதையான கயல் என்னும் சீரியலில் ஹீரோயின் கேரக்டரில் நடித்து வருகிறார். முதலில் நடித்த சீரியலில் வில்லியாக நடித்ததால் அந்த அளவிற்கு வரவேற்பு பெறாமல் இருந்தார். இந்த கயல் சீரியலில் ஹீரோயினாக நடிப்பதால் மேலும் அது நல்ல கருத்துடன் இருப்பதாலும் இதற்கு ரசிகர்கள் அதிக அளவில் உருவாகிக் கொண்டே உள்ளனர். ஆரம்பத்தில் இந்த சீரியலும் கூட அந்த அளவிற்கு வரவேற்பை பெறாவிட்டாலும் கூட அதன் பின் இவரின் ஆக்டிங்வை பார்த்து இவருக்காகவே சீரியல் ஓடவும் ஆரம்பித்துவிட்டது. அந்த அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் சைத்ரா ரெட்டி!! இப்படி ஷூட்டிங்கை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் இவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது!!
அதாவது, சமீபத்தில் கயல் சீரியலில் சூட்டிங் முடித்துவிட்டு நள்ளிரவில் காரில் வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கும் பொழுது போரூர் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தன்னுடைய காருடன் நின்று கொண்டு இருந்தபோது மேலே மெட்ரோ கட்டுமான பணியின் போது போடப்பட்ட சிமெண்ட் கலவையானது எதிர்பாராத விதமாக அவரின் காரின் மீது விழுந்துள்ளது. அதனை பார்த்த போது நடிகை சைத்ரா ரெட்டி மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அந்த இடத்தில் இவரின் கார் நின்றதால் காருக்கு மட்டும்தான் சேதமடைந்துள்ளது. இவர் கார் இருந்ததால் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் உயிர் தப்பியுள்ளார். மேலும் இவரின் காருக்கு பதிலாக வேறேதும் இரு சக்கர வாகனங்கள் நின்று இருந்தால் அவர்களின் நிலைமை என்ன ஆகி இருக்கும்?? என்றும் பொதுமக்கள் மீது விழுந்திருந்தால் என்ன நிலைமை என்று கேள்வி எழுப்பியுள்ளார் சைத்ரா ரெட்டி!!
இதுபோன்ற கவனக்குறைவால் தொடர்ந்து பல விபத்துக்கள் நிகழ்ந்து வருவதை நாம் அடிக்கடி பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். மேலும் தனது காரில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் பாரு ஏற்பட்ட விபத்தினை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக அதனை புகைப்படம் எடுத்து எனது instagram அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார் நடிகை சைத்ரா ரெட்டி!! மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் பாதுகாப்பு நடவடிக்கையை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் கண்டிப்பாக அரசாங்கம் இதனை கவனிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வழியில் இருந்து பல வகையான கமெண்டுகள் எழுந்து வருகிறது!!