24 special

பாஜக திமுக இடையே மோதல்....!தலைதெறித்து ஓடிய கரூர் குரூப்...!

Annamalai,senthil balaji
Annamalai,senthil balaji

பாஜக திமுக இடையே நடந்துவரும் அரசியல் சதுரங்க ஆட்டம் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது கரூரில் பாஜக சார்பில் நடைபெறும் விழாவிற்கு விழா அரங்கை தயார் செய்யும் பணிகள் முழு அளவில் நடந்து வந்த நிலையில் திடீர் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.


அண்ணாமலை கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதாலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு பாஜக சார்பில் மாவட்டத்தில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சி என்பதாலும் இதை தடுக்க பல வழிகளில் செந்தில் பாலாஜி தரப்பு முட்டு கட்டை போட்ட நிலையில் நேரடியாக நீதிமன்றம் சென்ற பாஜகவினர் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வாங்கினர்.

நீதி மன்றம் அனுமதி கொடுத்தது செந்தில் பாலாஜி தரப்பிற்கு பெரும் பின்னடவை கொடுத்த நிலையில் தற்போது விழாவை எப்படியாவது நிறுத்த வேண்டும் அதற்கான வேளைகளில் இறங்குமாறு முக்கிய இடத்தில் இருந்து உத்தரவு வந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து திமுகவினர் பாஜக நிகழ்ச்சிக்கு தயாராகும் இடத்திற்கு செல்ல அங்கு பெரும் பிரளயமே வெடித்தது.

கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளும் "மாற்றத்திற்க்கான மாநாடு" நடைபெறுவதை ஒட்டி இன்று பாஜக சார்பில்  பந்தல்கள் அமைப்பதற்காக பொருட்களை உள்ளே எடுத்து வந்த போது, திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் யாரும் உள்ளே பந்தல் அமைக்க கூடாது என்று அப்பகுதியில் ஒன்று கூடினர் எங்களை மீறி பொருட்களை எடுத்துசெல் பார்க்கலாம் எனவும் ஆவேசமாக பேசினர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.பாஜக சார்பில் கோர்ட் அனுமதி உடன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினர். திமுக சார்பில் ஜூலை 1ஆம் தேதி மட்டும் தான் கோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. எனவே இப்போது இவர்கள் பந்தல் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும், பாஜக சார்பில் ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடாக பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சி நிர்வாகம்   திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் பூட்டி இருந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் திறந்து விட்டனர். அதனால் மாநாட்டு பணிகள் நடைபெற்று வந்தது. எனவே மாநகராட்சி ஆணையர் நேரில் வந்து  விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கூறியுள்ளனர்.

இதையடுத்து கோசம் போட்டு நிகழ்ச்சியை தடுக்க நினைத்த திமுகவினர் கலைந்து சென்றனர், யார் தடுத்தாலும் யார் மூலம் மிரட்டல் விடுத்தாலும் கரூரில் திட்டமிட்டபடி மாநாடு நடக்கும் யாராக இருந்தாலும் சந்திக்க தயார் என கரூர் பாஜகவினரும் திமுகவினரை சுற்றி வளைத்ததால் தற்போது கரூர் முழுவதும் பாஜகவின் மாற்றத்திற்கான மாநாடு பற்றிய செய்தியே பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.