Politics

தேர்தலுக்கு பிறகு சிறப்பான சம்பவம் செய்த அண்ணாமலை,சொன்னதை செய்தார்!!

தேர்தலுக்கு பிறகு சிறப்பான சம்பவம் செய்த அண்ணாமலை,சொன்னதை செய்தார்!!
தேர்தலுக்கு பிறகு சிறப்பான சம்பவம் செய்த அண்ணாமலை,சொன்னதை செய்தார்!!

தமிழக சட்டசபை பொது தேர்தல் ஏப்ரல் 6 அன்று முடிவடைந்தது மிகவும் விருவிருப்பாக நடைபெற்ற பொது தேர்தல் எந்த வித அசம்பாவதமும் இல்லாமல் அமைதியாக முடிவடைந்தது இந்த சூழலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார்.


திமுகவின் கோட்டை என கூறப்படும் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையின் செயல்பாடு பல அதிரடிகளை உண்டாக்கியது, இஸ்லாமியர்கள் வசிக்கும் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதிக்குள் பாஜகவினர் வர கூடாது என ஜமாத் தடைவிதிக்க, பள்ளப்பட்டி இந்தியாவிற்குள் தான் உள்ளது, நான் வாக்கு சேகரிக்க செல்வேன் என அடித்து கூறினார் அண்ணாமலை.

அண்ணாமலையின் எதிர்வினையை கண்டு மிரண்ட ஜாமத் நிர்வாகம் அறிவிப்பை வாபஸ் வாங்கியது, இது போன்று பல அதிரடிகளை தேர்தலுக்கு முன்னர் செய்தவர், தேர்தலுக்கு பின்னர் மேலும் பல அதிரடிகளை செய்துள்ளார் அதில் ஒன்றுதான், தனக்காக தேர்தலில் உழைத்த தன்னார்வலர்களுக்கு பிரியா விடை நிகழ்ச்சி நடத்தினார்.

அப்போது வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தனக்கு வேலை செய்ய வந்த நபர்கள் குறித்து, பொதுவெளியில் வெளிப்படையாக தெரிவித்தார், இளைஞர் ஒருவர் எந்தவித பிரதி பலனும் இல்லாமல் தனக்காக வந்ததும், இஸ்லாமிய பகுதிகளில் பிரச்சாரம் செய்த அனைத்து விபரங்களையும் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெற்ற பிறகு போலி டோக்கன் கொடுத்து ஏமாற்றும் கட்சி நபர்களுக்கு மத்தியில் தனக்காக வேலை செய்யவந்த, அத்தனை பேரையும் முறையாக நேரில் அழைத்து நன்றி தெரிவித்து சிறப்பான சம்பவம் செய்திருக்கிறார் அண்ணாமலை, அத்துடன் தனக்காக தேர்தல் பணியாற்றிய நபர்களுடன் தனது நேரத்தை செலவு செய்து அவர்கள் கொடுத்த சில தகவல்களையும் முறையாக கேட்டு பெற்றுள்ளார்.

திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜி திமுக ஆட்சிக்கு வந்த 5 நிமிடத்தில் மணல் திருடலாம் என பேசியதும், தனக்காக தேர்தல் பணி செய்யவந்த இளைஞர்கள் தன்னார்வலர்கள் அனைவரையும் தேர்தலுக்கு பிறகும் அண்ணாமலை சந்தித்து பேசியது ஆகிய இரண்டு வீடியோகளும் இணையத்தில் ஒப்பீடு செய்யப்பட்டு பகிர பட்டு வருகின்றன.