24 special

ஊழலை.. ஆதாரத்தோடு ஆளுநரிடம் கொடுத்த அண்ணாமலை! அரசியலில் அடுத்த அதிரடி திருப்பம்..!

Rnravi
Rnravi

பொதுமக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் ஊழல் நடந்திருப்பதாக அண்ணாமலை ஊழல் அறிக்கை ஒன்றை தயார் செய்து கவர்னரிடம் மனு கொடுத்துள்ளார். 


நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் நல்ல குடிநீர் கிடைக்க மாநில அரசின் மூலம், மத்திய அரசு  மாநிலங்களுக்கு 100% நிதியை ஜல் ஜீவன் திட்டத்திற்காக வழங்கி செயல்படுத்துகிறது.

நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் நல்ல சுத்தமான தரமான குடிநீரை வீட்டுக்குள் கொண்டு கொடுக்க வேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.தமிழ்நாட்டில் சுமார் ரெண்டு கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். 

தமிழ்நாடு அரசு  சுமார் 70 லட்சம் இணைப்புகளுக்கு மேல் கிராமப்புறங்களில் கொடுத்து விட்டோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதே சமயத்தில் சோசியல் மீடியாக்களில் சில வீடியோக்களில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட பைப்புகள் எந்தவித கனெக்ஷனும் கொடுக்காமல் வெறும் டம்மி பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்று வெளிவந்து வைரலாகி கொண்டிருந்தும்,  மேலும் நிறைய கனெக்சனுக்கு போலியாக டம்மி பைப்பை மட்டும் மாட்டி வைத்துக் கொண்டு கனெக்சன் கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார்கள் என்று அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர்  அண்ணாமலை இந்த திட்டத்தில் நடந்திருக்கும் ஊழல் பற்றி  கவர்னரை சந்தித்து விரிவான அறிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறார்.

கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பலரும் இனியாவது தமிழக அரசு அரசு அதிகாரிகளை முடுக்கி விட்டு , உண்மையை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?  டம்மி பைப்புகளை அகற்றிவிட்டு உண்மையான கனெக்சன் கொடுப்பார்களா? நல்ல குடிநீர் வீடுதோரும் எங்களுக்கு கிடைக்குமா ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Gokulakrishnan S