24 special

வாயாலயே வடை சுடாதீங்க செந்தில் பாலாஜி... அதிரடி காட்டிய அமர் பிரசாத் ரெட்டி!

amar prasad reddy , senthil balaji
amar prasad reddy , senthil balaji

மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் போது அதற்கு தனது பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் திமுக அரசு, மக்களிடம் இருந்து வெறுப்பை சம்பாதிக்கும் திட்டங்களுக்கு மட்டும் மத்திய அரசின் பெயரைச் சொல்லி தப்பித்துக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் பின்னால் மறைந்துள்ள திமுக அரசின் உண்மையான முகத்தை பாஜக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அமர் பிரசாத் ரெட்டி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். 


சமீபத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம்3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2 கோடியே 20 லட்சம் இணைப்புகள் வீடுகளுக்கும், 10 லட்சம் இணைப்புகள் குடிசைகளுக்கும், 23 லட்சம் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்கும் உள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 6ம் தேதி அன்று, 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறும் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருந்தது. 

மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மெதுவாக செயல்படுவதாலும், சாமானிய மக்கள் கடும் சிரமங்களை சந்திப்பதாலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இன்று அந்தர் பல்டி அடுத்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கட்டணம் செலுத்த வரும் மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காவிட்டாலும் அவர்களிடம் மின் கட்டணத்தை வசூலிக்கலாம் என்றும், இதுவரை மின் கட்டணம் செலுத்தாத நுகர்வோர்களிடம் அபராதம் இல்லாமல் மின் கட்டணத்தை வசூலித்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயம் அல்ல என தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்கு முன்னதாக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, யார் யார் மானியம் பெறுகிறார்கள் என்பது குறித்த தரவுகளை பராமரிக்கவே ஆதார் எண் இணைக்கப்படுவது தமிழக அரசு தனது அரசாணையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் பிரபல யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்த பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, பல பேட்டிகளில் கூட மத்திய அரசு கூறியதால் தான் மின் இணைப்பு எண் உடன் ஆதார் இணைக்கப்படுவதாக கூறியுள்ளார் என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு மக்கள் கஷ்டத்தில் இருக்கும் பால் மற்றும் மின் கட்டணங்களை திமுக அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் தான் விலையை உயர்த்தினார்கள் என்றால், மின் கட்டணத்தை உயர்த்தும் படி மத்திய அரசு தெரிவித்த அதிகாரப்பூர்வ கடிதத்தைக் காட்ட முடியுமா?. இப்படியே தான் திமுக அமைச்சர்கள் வாயால் வடை சுட்டுகிறார்கள். இந்தி திணிப்பு விவகாரத்திலும் இப்படித்தான் திமுக இரட்டை வேடம் போட்டது. தமிழ் மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பிற திராவிட மொழிகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தமிழுக்கு கூடுதல் நிதி வேண்டும் என்றால் மத்திய அரசிடம் கேட்க வேண்டும். உடனே மத்திய அரசு அதனை செய்து தரும் என பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழக பாஜகவை எதிர்ப்பதை விட்டு விட்டு, சரியான முறையில் விளையாட்டுத்துறை சம்பந்தமாக இரண்டு புரோபோசல்களைக் கொடுங்கள், மத்திய அரசிடம் பேசி நான் நிதி வாங்கித் தருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.