24 special

இதுதான் அவங்க ஆயுதத்தையே எடுத்து அவங்கள போடுறது...! அண்ணாமலை எடுத்த ஆயுதம்...!

annamalai, mk stalin
annamalai, mk stalin

மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின் போது  அறிவித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த திட்டம் பற்றி வாய் திறக்காமல் இருந்த திமுக அரசை மக்கள் அனைவரும் சேர்ந்து கேள்வி எழுப்ப ஆரம்பித்த உடன் ஈரோடு கிழக்குத்  தேர்தலின் போது முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இந்த திட்டம் செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து  இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில் அனைத்து மகளிரும் ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வந்தனர்.இப்படி ஒரு பக்கம் மக்களுக்கு இந்த செய்தியை கொடுத்துவிட்டு மறுபக்கம் தமிழகத்தின் அனைத்து மகளிருக்கும் வழங்குகிறேன் எனக்கூறிய திட்டத்தை ஒரு கோடி மகளிர் மட்டுமே பயன் தரும் வகையில் சுருக்கியது மேலும் மகளிருக்கான உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் பல கட்டுப்பாடுகள் அடங்கியுள்ளதால் இத்திட்டத்தில் பயன்பெறாத மகளிர் அனைவரும் தங்கள் புலம்பலை தெரிவித்து வருகின்றனர்.


இதனை தொடர்ந்து பல கட்சி தலைவர்களும் முதல்வரின் இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தவும் செய்தனர் ஆனால் அதை எதுவும் கேட்காமல் மகளிருக்கான உரிமை தொகை திட்டத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு 1 ரூபாயை  சிலரது வங்கிக் கணக்கில் தமிழக அரசு வரவு செய்தது அதனை தொடர்ந்து  மறுநாள் 1000 ரூபாய் தகுதி உள்ள மகளின் வங்கி கணக்குகளில் ஏறியது.ஆனால் மகளிர் காண உரிமை தொகை வழங்கும் திட்டம் அனைத்து மகளிர்க்கும் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகம் எழுந்துள்ளன. இதுமட்டும் இல்லாமல் ஒரு சிலரின் வங்கி கணக்குகளில் மட்டுமே ஆயிரம் ரூபாய் வரவு செய்யப்பட்ட நிலையில் ஆயிரம் ரூபாய் தொகை கிடைக்காத மகளிர் அனைவரும் தற்போது திமுக அரசை  குறை கூறி  திட்டி வருகின்றனர். எப்படியும் இந்த திட்டத்தால் வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலுமே திமுகவிற்கு மகளிர் மத்தியில் பெரும் பின்னடைவு தான் ஏற்படுத்தும் என்பது இந்த திட்டத்தின் மூலம் தெளிவாக காட்டுகிறது அந்த அளவிற்கு மக்கள் அனைவரும் கொதிப்பிலிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து அரசியல் தலைவர்களும் இந்தத் திட்டம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை நடத்திவரும் நிலையில் மகளிருக்கான உரிமை தொகை  வழங்கியதில் திமுக அரசை கண்டித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை தருவோம் என்று கூறினார்கள் மேலும் தமிழகத்தில் தற்போது மகளிர் மட்டும் இரண்டு கோடி பேர் இருக்கும் நிலையில் அதில் 75 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த உரிமை தொகை சென்றடைந்துள்ளது என்றும் பாஜக வலியுறுத்தினால் ஒரு கோடி பேருக்கு கூட நாங்கள் உரிமை தொகையை கொடுப்போம் என்று கூறி கூறிவிட்டு தற்போது மகளிரை ஏமாற்றுகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். 

இது மட்டுமில்லாமல் மகளிர்க்கான உரிமை தொகை என்பது அனைத்து மகளிருக்கும் சென்றடைய வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் கிடைக்காத மகளிருக்காக அனைவரும் போராட வேண்டும் என்றும் அந்தந்த பகுதியில் உள்ள பாஜகவினர் இதற்கு எதிராக கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சியினருக்கு மறைமுக அசைன்மென்ட் ஒன்றை கொடுத்துள்ளார். இதன் காரணமாக இந்த திட்டத்தில் பயன்பெறாத மகளிர் அனைவரும் திமுக அரசுக்கு எதிராக குரல் எழுப்புவர் இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் நிலையில் அது திமுக அரசுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.