தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரை அடிப்படையாக வைத்து சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறை பல குழுக்களாக பிரிந்து இரண்டு தினங்களுக்கு முன்பு சோதனையில் இறங்கியது. இந்த சோதனை மணல் குவாரிகள் வைத்திருக்கும் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் மேலும் அரசு ஒப்பந்ததாரர்களாக இருப்பவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களிலும் மணல் குவாரிகளிலும் நடைபெற்றது. இந்த சோதனையில் விண்ணப்பம் கேட்டவர்களுக்கு மணல் அனுப்பாமல் முறைகேடாக அனுப்பப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது இதற்கான ஆவணங்களையும் அமலாக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அமலாக்க துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை மணல் குவாரிகள் சார்ந்த சோதனையாக மட்டுமல்லாமல் கனிம வளங்கள் சார்ந்த சோதனையாகவும் கனிமவள அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடத்தி விசாரணைக்காக மூன்று கனிமவள அதிகாரிகளை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை.
இதனையடுத்து ஓரிரு பகுதிகளில் சோதனைகள் முடிவடைந்தது ஆனால் மணல் குவாரிகளில் இருந்து எத்தனை யூனிட் மண் வெளியே எடுக்கப்படுகிறது விண்ணப்பங்கள் எத்தனை வரவேற்கப்பட்டுள்ளது என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து அடுத்த 2 நாட்களாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சியில் நடைபெற்ற சோதனையின் பொழுது அரசின் வழிகாட்டுதல் வழி தான் மணல் கொண்டு செல்லப்படுகிறதா என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையின் முடிவு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வரிசையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சோதனை நடத்திய பொழுது ஜி டி என் சாலையில் வசித்த தொழிலதிபராக கருதக்கூடிய ரத்தினம் என்பவர் வீட்டில் அமலாக்க துறையின் சோதனை என்பது தீவிரமானதாகவும், சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ரத்தினம் அவர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரது வழக்கறிஞர்கள் சிலர் வீட்டின் முன்பு பாதுகாப்பில் இருந்த ராணுவ படை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களில் ஒன்று கேரள மாநிலத்தைச் சேர்ந்ததாகவும் மற்றொன்று தமிழகத்தை சேர்ந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்ற பகுதிகள் அனைத்திலும் சோதனையை முடித்துக் கொண்ட அமலாக்கத்துறை ரத்தினம் என்பவரது வீட்டில் மட்டும் சோதனையை தொடர்ந்தது பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்தேகத்தையும் செய்தி திரட்டவும் வைத்தது. மேலும் தொடர்ந்த சோதனை கிட்டத்தட்ட 36 மணி நேரங்களுக்கு பிறகு திண்டுக்கல் தொழிலதிபரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்தனர். இறுதியில் அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் பலவற்றை அமலாக்கத்துறை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படி ரத்தினம் வீட்டில் கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களும் தமிழகத்தில் நடைபெற்ற மணல் மாஃபியாக்கள் தொடர்பான ஆவணங்களாகும். இதனால் பெரும்புள்ளிகள் அனைவரும் இதில் சிக்க இருப்பதாகவும் இந்த ரெய்டு இப்பொழுது நடந்தது மேலும் அடுத்தடுத்த தினங்களுக்கு மீண்டும் நடக்கக்கூடும், இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியை போன்று இன்னும் சில திமுக அமைச்சர்கள் ஜெயில் செல்ல காரணமாக இந்த ரெய்டு அமையப்போகிறது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதோடு கடந்த சில நாட்களுக்கு முன்பு யாத்திரையில் அண்ணாமலை சில அமைச்சர்களின் பெயரை குறிப்பிட்டு கூறினார், அண்ணாமலை இப்படி கூறி அடுத்த இரண்டு தினங்களில் அமலாக்கத்துறை இறங்கியது அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் அண்ணாமலை கூறிய பெயர்களுடன் இந்த அமலாக்கத்துறை ரெய்டு பற்றிய விவகாரங்களும் ஒத்துப்போவதால் இனி நடக்கப்போகும் சம்பவங்கள் தமிழக அரசியலை புரட்டிப்போடும் எனவும் வேறு சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.