24 special

கபில் சிபில் வந்தும் பப்பு வேகலையாமே..! இனி வாழ்நாள் முழுசும் கம்பிக்கு பின்னாடிதானா? VSB பரிதாபங்கள்...!

senthilbalaji, arivalayam
senthilbalaji, arivalayam

இதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதே சட்டவிரோதமானது என்று அவரது மனைவி தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வகையில் அமலாக்கத்துறை தகுந்த ஆதாரங்களை தாக்கல் செய்ததால் செந்தில் பாலாஜி புழலில் அடைக்கப்பட்டு அமலாக்க துறையும் அவரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் கிட்டத்தட்ட 3000 பக்க குற்ற ஆவணங்களை செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையே நீடித்தால் ஜாமினில் கூட வெளிவர முடியாது என்பதை உணர்ந்த செந்தில் பாலாஜி தரப்பு அமலாக்கத்துறை கைது செய்ததை ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல் ஜாமீன் குறித்து மனு தாக்கல் செய்ய  நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்தது இறுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று அனுமதி பெற்ற பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை நீதிபதி அல்லி முன்பு வந்துள்ளது.


இதுவரை செந்தில்பாலாஜி வழக்கில் ஜாமீன் வழக்கிற்கு ஆஜராகாத வழக்கறிஞராக இருந்த மிகப்பெரும் வழக்கறிஞர் கபில் சிபில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கிற்கு ஆஜரானார், ஆஜரானதுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சட்டவிரோத பண பரிமாற்றம் என்ற குற்றம் 9 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது அதற்கான ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை! அதோடு கடந்த 9 ஆண்டுகளாக அமைச்சர் செந்தில் பாலாஜி வருமான வரியும் தாக்கல் செய்துள்ளார் ஒருவேளை அவர் சட்ட விரோதமாக பணத்தை பரிமாற்றம் செய்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கும் பொழுது செந்தில் பாலாஜியின் வருமான தாக்கலை எப்படி வருமானவரித்துறை ஏற்றிருக்கும்! அதோடு பழி வாங்கும் நோக்கத்திற்காகவே செந்தில் பாலாஜி மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் கபில் சிபில் தனது வாதங்களை முன் வைத்தார். 

இதற்குப் பிறகு அமலாக்கத்துறை தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், வழக்கறிஞர் கபில் சிபில் கூறியது அப்பட்டமான பொய் என்றும், ஜாமீன் வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக இந்த பொய்யான தகவலை செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் தெரிவிக்கிறார் என்றும் செந்தில் பாலாஜியின் வருமான வரி கணக்கு வருமானவரித்துறை ஏற்றதால் இது சட்டபூர்வமான பணம் என்று குறிப்பிட முடியாது ஏனென்றால் முறைகேடாக பெறப்பட்ட பணம் அனைத்தும் ரொக்கமாகவே பெறப்பட்டுள்ளது என்று கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் செந்தில் பாலாஜி ஜாமினை நிராகரிக்க வேண்டும் என்று அமலாக்க துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜென்ரல் ஏ ஆர் எல் சுந்தரேசன் வாதாடினார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி அல்லி இறுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்த மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 20ஆம் தேதி வழங்குவதாகவும் மேலும் நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி காவல் காலம் முடிவடைவதை முன்னிட்டு அவரது நீதிமன்ற காவலை வருகின்ற 29ஆம் தேதி வரை நீடித்தும் உத்தரவிட்டார். எப்படியாவது ஜாமீன் வாங்கி விட வேண்டும் என்று மிகப்பெரும் வழக்கறிஞரைக் கொண்டு கோடிகளில் கொட்டி வாதாடியும் அமலாக்கத்துறை வைத்திருந்த ஆதாரங்களால் செந்தில்பாலாஜி தரப்பு கிடுகிடுத்துப்போய் உள்ளது. இதன் காரணமாக பல கோடி கொட்டி குடுத்து கபில் சிபில் வாதாடியும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காமல் நீதிபதி அல்லி தீர்ப்பை ஒத்தி வைத்தது செந்தில் பாலாஜியை மேலும் சோர்வடைய செய்துள்ளது. கபில் சிபிலே வாதாடி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் இனி அவருக்கு ஜாமீன் கிடைப்பது என்பது சிரமம் தான் என இப்பொழுதே அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.