நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக பொது கூட்டத்தில் அண்ணாமலை வெளிப்படையாக முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை கொடுத்து இருந்தார், தமிழர்களுக்கு தண்ணீர் திறந்து விட மாட்டோம் என கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்து இருந்தார்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் அதை கண்டிக்காமல் நேராக பெங்களூரில் நடக்கும் எதிர் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதாக தெரிவித்து இருக்கிறார் உங்களுக்கு எல்லாம் கொஞ்சமாவது தமிழ் மக்கள் மீது பாசம் இருக்கிறதா?
நீங்கள் பெங்களூரு சென்று கூட்டத்தில் கலந்து கொண்டால் உங்களை மீண்டும் தமிழ் நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்து இருந்தார், இந்த நிலையில் பெங்களூரில் நடங்க இருந்த எதிர் கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் அதற்கு பதிலாக வேறு மாநிலத்திற்கு கூட்டம் மாற்ற படுவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நேற்று இரவே திமுக தலைவர்கள் பெங்களூரில் கூட்டம் நடந்தால் பெரிய அரசியல் பின்னடைவை எங்களுக்கு கொடுக்கும் என்பதால் உடனே வேறு இடத்திற்கு மாற்றுங்கள் என கோரிக்கை விடுத்தார்கலாம்,அதனை தொடர்ந்து கூட்டத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை நேற்று எச்சரிக்கை விடுத்த நிலையில் இன்று திமுக கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை வைத்து இருப்பதும் கூட்டம் ரத்து செய்ய பட்டதும் தமிழக விவசாயிகளுக்கு பாஜகவால் கிடைத்த வெற்றி என இப்போதே முதற்கட்ட கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பாஜகவினர்.